தகுதி போட்டியில் சோலோவாக ஓடி அரையிறுதிக்கு தகுதியடைந்த தடகள வீரர்!!

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (15:59 IST)
லண்டனில் உலக தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தடகள வீரர் ஒருவர் தனியாய் ஓடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


 
 
போஸ்ட்வானா நாட்டை சேர்ந்த ஐசக் மக்வாலா, தகுதிப் போட்டியில் தனியாக ஓடி, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
 
200 மீட்டர் ஓட்டத்துக்கான தகுதிப் போட்டி நடப்பதற்கு, முன் ஏற்பட்ட வயிற்று வலியால், அவர் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. 
 
இதனால், போட்டி விதிகளின்படி தகுதிப் போட்டி முடிந்த பிறகு, 48 மணி நேரத்துக்குள் மீண்டும் களத்தில் இறங்கினால், மறு வாய்ப்பு அளிக்கப்படும்.
 
இந்நிலையில், 48 மணி நேரத்திற்குள் போட்டியில் பங்கேற்க மக்வாலா தயாராகிவிட்டார். 200 மீட்டர் தூரத்தை, 20.53 விநாடிகளுக்குள் கடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. தனியாக களத்தில் இறங்கிய மக்வாலா, 20.20 விநாடிகளில் கடந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்