2 ஆண்டுகள் தள்ளிப்போகும் ஆசியக் கோப்பை தொடர்!

செவ்வாய், 25 மே 2021 (07:48 IST)
ஆசிய அணிகளுக்குள் நடக்கும் தொடரான ஆசிய கோப்பை 2023 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே இந்த ஆண்டு நடக்க இருந்த ஆசியக் கோப்பை டி 20 தொடர் 2023 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக எந்த அணிகளும் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடவில்லை. அதை ஈடுகட்டும் வகையில் இந்த ஆண்டு நிறைய போட்டிகள் நடக்க உள்ளதாலும், ஆசிய கோப்பைக்கான அட்டவணை தயாரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாலும், தொடரை 2023 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்