அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஐபிஎல் விளையாடும்போது என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி என்னால் சரியாக தூங்க முடியவில்லை. அதனால் தொடரில் இருந்து விலகி குடும்பத்துடன் இருப்பது என முடிவெடுத்தேன். அதனால் என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியுமா என்றுகூட யோசித்தேன். ஆனால் அனைவரும் சிகிச்சையில் எப்படியோ குணமாகிவிட்டனர். அப்போதுதான் எனக்கு மீண்டும் விளையாடலாம் என்ற நம்பிக்கை வந்தது எனக் கூறியுள்ளார்.