ஆஷஸ் தொடர்: 5வது போட்டியிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
திங்கள், 17 ஜனவரி 2022 (07:15 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்றது
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 303 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 155 ரன்கள் எடுத்தன
இதனையடுத்து முதல் இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது
ஆனால் அந்த அணி 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 4 வெற்றிகளை பெற்று அபாரமாக தொடரையும் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது