பவுலரானது ஏன்? டார்லிங் பட்டம் வென்ற சச்சின் மகன் விளக்கம்

வியாழன், 18 ஜனவரி 2018 (15:16 IST)
வேகப்பந்து வீச்சாளராக முடிவு செய்தது ஏன்? என்று சச்சின் மகன் அர்ஜூன் விளக்கமளித்துள்ளார்.

 
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் பேட்டிங்கில் பல சாதனைகள் படைத்துள்ளார். உலகளவில் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் அர்ஜூன் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கியுள்ளார்.
 
ஆஸ்திரேலியா சிட்னியில் கிளப் டி20 போட்டிகள் நடைபெற்றது. இதில் சச்சினின் மகன் அர்ஜூன் பங்கேற்றார். விளையாடிய போட்டிகளில் ஆல் ரவுண்டராக அசத்தினார். இதற்காக அவருக்கு தொடரின் டார்லிங் பட்டம் வழங்கப்பட்டது. தான் வேகப்பந்து வீச்சாளராக முடிவு செய்தது ஏன் என்று அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
எனக்கு சிறுவயது முதலே வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதே கனவு. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரார்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவின் ஜாகிர் கான், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோர்தான் எனது ரோல் மாடல்கள்.
 
வாசிம் அக்ரம் எனக்கு எப்படி பந்தை பிடிப்பது, எப்படி ஸ்விங் செய்வது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்