தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் விரைவில் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
தைவான் நாட்டில் அதிபர் சாய் இன் வென் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தைவான் ஜனநாயக ரீதியில் சுயாட்சி முறையில் ஆட்சி செய்து வரும் நிலையில், சீனா, தைவானை சொந்தக் கொண்டாடி , தன் நாட்டுடன் இணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தைவான் எதிர்க்கட்சி தலைவரும், தைவானின் முன்னாள் அதிபர் மா இங்க ஜூயவ் அடுத்தவாரம் (மார்ச்-27) சீனாவுக்குச் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதுபற்றி அவரது அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தைவான் நாட்டு மாணவர்கள் குழு மா இங் ஜூயவ்வுடன் சீனாவுக்குச் செல்லவுள்ளதாகவும், அங்கு, சீன மாணவர்களுடன் உரையாட உள்ளதாகவும் ததகவல் வெளியாகிறது.