டி-20 போட்டியில் 278 ரன்கள்: உலக சாதனை செய்த ஆப்கானிஸ்தான்

சனி, 23 பிப்ரவரி 2019 (21:41 IST)
டி20 போட்டியில் 200 ரன்கள் அடிப்பதே அரிதாக இருந்து வரும் நிலையில் இன்று நடைபெற்று வரும் ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளது.
 
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணி, அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 278 ரன்கள் குவித்தது. 
 
இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹர்ஜ்ரதுல்லா ஜாஜாய் 62 பந்துகளில் 162 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்கள் அடங்கும். அயர்லாந்து அணியில் எட்டு பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் 
 இவரை கட்டுப்படுத்தவும் அவுட் ஆக்கவும் முடியவில்லை அந்த அணியின் உஸ்மான் 73 ரன்கள் அடித்தார். 
 
இந்த நிலையில் 279 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் அயர்லாந்து சற்றுமுன் வரை 15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டிரிங் 91 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்