காஞ்சனமாலா பாண்டே(26) நாக்பூரைச் சேர்ந்தவர். பார்வை குறைபாடுடைய இவர் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். மெக்ஸிகோவில் நடைபெற்ற 200 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார். உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தகுதி பெற்ற ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை காஞ்சனமாலா பெற்றுள்ளார்.