கடைசி 2 பந்துகளில் விக்கெட்டுக்கள்: 85 மட்டுமே தெ.ஆப்பிரிக்காவுக்கு இலக்கு!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (17:18 IST)
கடைசி 2 பந்துகளில் விக்கெட்டுக்கள்: 85 மட்டுமே தெ.ஆப்பிரிக்காவுக்கு இலக்கு!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்ததை  அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு 85 ரன்களை மட்டுமே இலக்காக கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று 30வது போட்டி வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே  நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்ததை அடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த அணியின் மெஹதி ஹசன் என்பவர் மட்டும் 27 ரன்கள் அடித்தார் என்பது தொடக்க ஆட்டக்காரர் தாஸ் 24 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு தங்களுடைய விக்கெட்டுக்களை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடைசி ஓவரை வீசிய தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சாளர் நார்ட்ஜே பந்துகளில் 2 பந்துகளில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தி வங்கதேசம் இன்னிங்சை முடித்து வைத்தார். வங்கதேச அணி 18.2 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் தென்னாபிரிக்க அணி 85 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பதும் அந்த அணி மிக எளிதில் இன்றைய போட்டியில் வென்று விடும் என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்