வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதில், கிரிக்கெட்டை சேர்க்க ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.அதேபோல், பேஸ்பால், ஸ்குவாஷ், ஷாப்ட்பால், பிளாக் புட்பால் ஆகிய 4 போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்பட 5 போட்டிகளை சேர்ப்பதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.