ஒரே இன்னிங்ஸில் 4 பேட்ஸ்மேன்கள் சதம்: பாகிஸ்தானின் அபார பேட்டிங்

ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (16:10 IST)
பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கராச்சியில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது
 
முன்னதாக முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 191 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 271 ரன்கள் எடுத்தது.
 
இந்த நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி அபாரமாக விளையாடி 555 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 174 ரன்களும், அசார் அலி 118 ரன்களும், பாபர் அசாம் 100 ரன்களும் எடுத்தனர். ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடிப்பது என்பது அரிதான நிகழ்வாகும் 
 
இதனை அடுத்து 473 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இலங்கை அணி தற்போது 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இன்னும் ஒருநாள் மீதி உள்ள நிலையில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமென்றால் 378 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்பதால் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்