மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு!

ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (18:10 IST)
மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு!
இன்று நடைபெற்று வரும் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 204 ரன்கள் குவித்துள்ளது
 
பெங்களூரு அணி ஒரு கட்டத்தில்  5 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் அதிரடியா இந்த ஸ்கோரை எட்டியுள்ளது. மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 78 ரன்கள் அடித்தார். அதேபோல் டிவில்லியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
டி வில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் அதிரடியால் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்துள்ளது. இதனை அடுத்து 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடி வரும் கொல்கத்தா அணி 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்