ஐபிஎல்-2021 ; பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

புதன், 14 ஏப்ரல் 2021 (23:37 IST)
14வது ஐபிஎல்  சீசன் கிரிக்கெட் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணிக்கு பெங்களூர் அணி 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

14வது ஐபிஎல்  சீசன் கிரிக்கெட் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று ஐதராபாத் அணியும் பெங்களூர் அணியும் மோதின.

இதில், முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் பந்து வீச்சுதேர்வு செய்தார்.

பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவியில் 149 ரன்கள் எடுத்து 8 விக்கெடுகள் இழந்தது. ஐதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் ஆட்டம் இன்றைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இரண்டாவதாக பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.இதனால் பெங்களூரு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்