ஒரே போட்டியில் 2 தங்கப் பதக்கம்: ஒரு வரலாற்றுத் தருணம் சாத்தியமானது எப்படி?

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (11:23 IST)
டோக்யோ ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தார் நாட்டைச் சேர்ந்த முர்தாஸ் எஸ்ஸா பார்சிமும் இத்தாலியின் கியான்மார்கோ தாம்பெரியும் தங்கப்பதக்கத்தை வென்றார்கள்.

 
1912-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக் தடகளத்தில் இப்படியொரு நிகழ்வு நடப்பது முதல்முறையாகும். டோக்யோ ஒலிம்பி உயரம் தாண்டுதலில் வீரர்கள் அடுத்தடுத்த உயரங்களைத் தாண்டிக் கொண்டே இருந்ததால் போட்டி மிக நீண்ட நேரமாக நீடித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் பார்சிமும் தாம்பெரியும் 2.37 மீட்டர் உயரத்தைத் தாண்டியிருந்தார்கள்.
 
அதற்கு அடுத்தாக 2.39 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருவரும் மூன்று முறை முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. அப்படித் தாண்டினால் அது ஒலிம்பிக் சாதனையாகக் கருதப்பட்டிருக்கும்.
 
களைப்படைந்த இருவரும் பதக்கத்தைப் பகிர்ந்து கொள்வது என முடிவெடுத்தார்கள். அதனால் இருவருக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த முடிவு பெரிய வரவேற்பைப் பெற்றது. கூடியிருந்தவர்கள் ஆராவாரம் செய்தனர்.

இந்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வழங்கப்படவில்லை. மூன்றாவதாக 2.37 மீட்டர் உயரம் தாண்டிய பெலாரஸ் நாட்டு வீரர் மாக்சிமுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்