177 ரன்கள் இலக்கு கொடுத்த மே.இ.தீவுகள்: இந்தியாவுக்கு வெற்றி கிடைக்குமா?

ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (17:57 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணியை கொடுத்துள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி  79 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த போதிலும் அதன் பின்னர் ஹோல்டர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் அந்த அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
 இதனையடுத்து தற்போது இந்திய அணி 177 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் சற்று முன் வரை இந்திய அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்