பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து கொடுத்த இலக்கு: இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?
புதன், 9 நவம்பர் 2022 (15:46 IST)
பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து கொடுத்த இலக்கு: இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று முதலாவது அரையிறுதி போட்டி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியின் மிட்செல் 53 ரன்களும் கேப்டன் வில்லியம்சன் 46 ரன்களும் எடுத்து உள்ளனர்
இதனையடுத்து தற்போது 153 என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் விளையாடுகின்றனர்
சற்றுமுன் வரை 4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது என்பது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்