பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே: டூபிளஸ்சிஸ் அபார பேட்டிங்

வியாழன், 7 அக்டோபர் 2021 (17:30 IST)
பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே: டூபிளஸ்சிஸ் அபார பேட்டிங்
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து உள்ளன
 
இதனை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான டூபிளஸ்சிஸ் மிக அபாரமாக பேட்டிங் செய்தார் என்பதும் அவர் 51 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார் என்பதும் அவற்றில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
பந்துவீச்சை பொறுத்தவரை பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்