பேஷன் டிசைனர் லீபக்ஷி எல்லவாடியுடன் காதல் வதந்தி கடுப்பான யுவ்ராஜ் சிங்!

சனி, 3 மே 2014 (11:47 IST)
யுவ்ராஜ் சிங்கிற்கு நிறைய பெண் தோழிகள் உண்டு. கிம் சர்மாவிலிருந்து தீபிகா படுகோனே என்று யுவ்ராஜ் சிங்கை வைத்து பாலிவுட் பத்திரிக்கைகள் சூடான செய்திகளை வெளியிட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
மும்பை மிரர் பத்திரிக்கையில் யுவ்ராஜ் சிங் தற்போது லீபக்சி எல்லவாடி என்ற பேஷன் டிசைனருடன் ஊர்சுற்றி திரிவதாகவும் இருவரையும் அடிக்கடி இரவு விடுதிகளில் பார்க்க முடிகிறது என்றும் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் மும்பை மிரர் கொளுத்திப்போட...

கடுப்பான யுவ்ராஜ் சிங் தனது ட்விட்டரில் "இப்போதுதான் மும்பை மிரர் ஸ்டோரியை படித்தேன் இது மிக மோசமான, அல்பத்தனமான ஆதரமற்ற எழுத்து.
 
இது மிகவும் அசட்டையான பத்ரிகாவாதம், வதந்திகள் செய்திகளாகி அதுவே தலைப்பாகிவிடுகிறது.
 
மும்பை மிரர் எனக்கு ஒன்றும் அதிர்ச்சியளிக்கவில்லை. ஏற்கனவே பிரிட்டனில் திருமணமாகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவரும் எனது குடும்ப நண்பரையும் இதுபோன்று வதந்தி கதையில் இழுத்து விட்டனர். 
 
உண்மை என்னவென்று தெரிந்தவுடன் இதே பத்திரிக்கை செய்தி வெளியிட்டு மன்னிப்பும் கேட்டது. இதனை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
 
 
இவ்வாறு கொதித்துப் போய் எழுதியுள்ளார் யுவ்ராஜ் சிங்

வெப்துனியாவைப் படிக்கவும்