அதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 100 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் மிகவும் வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி பூம்ராவின் 19 ஆவது ஓவரில் 3 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்ததால் 200 ரன்களை எட்ட முடியவில்லை. இதையடுத்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. பூம்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.