சேவாகை துவக்கத்திலிருந்து நீக்கி பின்னால் களமிறக்குவதே உசிதம்
சனி, 21 ஜனவரி 2012 (12:56 IST)
FILE
சேவாகின் உடல்நிலை அல்லது அவரது கண்பார்வை, கால்நகர்த்தல்கள் ஆகியவற்றில் பல ஓட்டைகள் தெரியத் தொடங்கியுள்ளன. சாதாரணமாக ஸ்விங் செய்து நல்ல லைன் அன்ட் லெந்தில் மணிக்கு 130கிமீ வேகத்தில் வீசினால் போதுமானது ஒற்றை இலக்கத்தில் அதுவும் விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப் திசயில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து விடுகிறார் சேவாக்.
இந்நிலையில் அவருக்கு 33 வயதாகிறது என்றால் அவரிடமிருது இன்னும் 2 ஆண்டுகள் நல்ல கிரிக்கெட்டை எதிர்பார்க்கிறோம் என்றால் அவரை லஷ்மண் இடத்தில் களமிறக்குவது உசிதம் என்றே தோன்றுகிறது. கம்பீர், ரஹானே, துவக்கம், முதல் நிலையில் ரோஹித் ஷர்மா/புஜாரா, இரண்டாம் நிலையில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், கோலி, தோனி என்று வரிசை அமைவது சிறப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
நியூஸீலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகளில் இந்தியா பய்ணம் மேற்கொண்டபோது இந்திய துவக்க வீரர் விரேந்திர சேவாக் திருப்திகரமான ஆட்டங்களை கொடுக்கவில்லை என்பது தற்போதைய தோல்விகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட இடமுண்டு.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் சேவாக் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தால் 25 டெஸ்ட் போட்டிகளிலும், 26 மாதங்களிலும் இல்லாத அளவுக்கு அவரது சராசரி 50 ரன்களுக்கும் கீழ் முதன் முதலாகக் குறைய வாய்ப்புள்ளது.
மேற்கூறிய 4 அயநாட்டுப் பயணங்களிலும் சேவாகின் சராசரி 30 ரன்களுக்கும் கீழ் என்பது குறிப்பிடத்தக்கது. 21 இன்னிங்ஸ்களில் சேவாக் 500 ரன்களைக் கூட எடுக்கவில்லை. இதில் இரண்டே இரண்டு அரைசதங்கள்தான் ஒன்று மெல்பர்னில் அடித்தது இரண்டாவது தென் ஆப்பிரிக்காவில் செஞ்சூரியனில் இரண்டாவது இன்னிங்ஸ் எடுத்தது.
இந்தப் புள்ளிவிவரங்களை வைத்துப் பார்த்தால் அயல்நாடுகளில் ஹர்பஜன் சிங்குடன் கூட சேவாகை ஒப்பு நோக்க இயலாது போலும்!
இத்தனைக்கும் நியூஸீலாந்து தொடரில் அவர் நல்ல ஃபார்மில் இருந்தார். தென் ஆப்பிரிக்க தொடரிலும் நல்ல ஃபார்மில் இருந்தார். தற்போதும் ஃபார்மில் இருக்கிறார். இங்கிலாந்து தொடரை வேண்டுமானால் மன்னித்து விடலாம்.
நல்ல ஃபார்மில் இருக்கும்போதே தொடர்ந்து மோசமான ஸ்கோர்களில் ஆட்டமிழக்கக் காரணம் அவரது உத்திகள்தான். மேலும் தற்போது அவரடு கை%கண் ஒத்திசைவு சற்றெ மந்தமடைந்துள்ளது. எனவே அவர் பின்னால் களமிறங்குவதே உசிதம்.
FILE
சேவாகின் பலம் என்பது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஷாட் பிட்ச் பந்துகள் ஏன் குட் லெந்த் பந்துகளைக் கூட அவர் ஸ்கொயர் ஆஃப் தி விக்கெட்டில் ஆடும் திறன் படைத்தவர்தான். பந்துகள் நேராக வரும்போது அதனை லெக் திசையில் பவுண்டரிக்கோ அல்லது நேராக சில ஷாட்களையோ ஆடுவார் அதுதன அவரது பலம். ஆனால் இவையெல்லாம் முட்டிக்காலிலிருந்து இடுப்புயரம் வரும் துணைக்கண்ட ஆட்டக்களங்களில் சரியே. இடுப்புயரத்திலிருந்து நெஞுயரம் மற்றும் அதற்கு மேல் பந்துகள் எழும்பும் ஸ்விங் ஆகும் ஆட்டக்களங்களில் அவரது ஆட்டம் ஒத்து வராது. அவர் ஹூக் மற்றும் புல் ஷாட்களை ஆடடினால்தான் அங்கு நிற்க முடியும். மேற்கிந்திய தீவுகளின் முன்னிலை வீச்சாளர்கள் அந்தக் காலத்தில் எளிதான் ரன் எடுக்க முடியாத பந்துகளை வீசிக் கொண்டேயிருப்பர். அங்கு ரன் எடுக்கவேண்டுமென்றால் ரிஸ் எடுத்து சில ஷாட்களை தாறுமாறாக பலப்படுத்திக் கொண்டால்தான் உண்டு. சேவாகின் உத்தி துணைக்கண்டத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியது என்று கூறவில்லை.
இரண்டு 300ரன்களை அடித்த பிறகே உலகம் அவரை ஒரு பெரிய, அபாய வீரராகப் பார்க்கத் தொடங்கி அவரது ஆட்ட முறைகளை படம் எடுத்து வலைக்குள் சிக்க வைக்கும். இது அனைத்து வீரர்களுக்கும் நடைபெறுவதே. சச்சின் டெண்டுல்கர் சேவாகை விட ஆக்ரோஷமான ஆட்டக்காரர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரும் ஒரு சில ஆட்டங்களில் டிவி போடுவதற்கு முன்பு ஆட்டமிழந்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் ஆட்டத்தை டெண்டுல்கர் மாற்றிக் கொண்டார். இதுதான் உலகின் தலை சிறந்த வீரர்களுக்கான அடையாளம்.
சேவாக் மந்தமாக ஆடவேண்டும் என்று கூறவில்லை. துவக்க நிலையில் அவரது ஆட்டம் இனி செல்லுபடியாகாது. எனவே அவர் பின்னால் களமிறங்கினால் அதாவது புதிய பந்து பழதாகி 40அல்லது 50 ஓவர்களில் களமிறங்கினால் அவரால் மேலும் சிறப்பாக பங்களிப்பு செய்ய முடியும், அவரும் தோனியும் கடைசியில் இணைவது என்பது உத்தி என்றால் என்னவென்றே தெரியாமல் ஆடி வரும் தோனிக்கும் கூட ஊக்கத்தை அளிப்பதாக அமையும். அப்படி ஒரு பின்கள கூட்டணி அமைந்து கிளிக் ஆகிவிட்டால் இரண்டாவது புதிய பந்தில் இந்திய அணியை 30- 40 ரன்களில் சுருட்டி எதிரணியினர் மகிழும் காலத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியும்.
ஸ்ரீகாந்த், அணி நிர்வாகம், சேவாக் உட்பட இந்த சாத்தியத்தைப் பற்றி விரைவில் பரிசீலிப்பது சிறந்தது. இன்னொரு இளம் துவக்க வீரரை உருவாக்கிய பெருமையும் இதனால் இந்திய அணி நிர்வாகத்திற்கு வந்து சேரும்.