எதிர்பார்ப்புகளும் அழுத்தங்களும் இந்திய அணியை சாம்பியன்களாக்குமா?

வியாழன், 10 பிப்ரவரி 2011 (17:55 IST)
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பலமான முழு இந்திய் அணி இதில் களமிறங்குகிறது. இதனால் எதிர்பார்ப்புகள் அழுத்தம் அதிகரித்து வருகிறது. சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக் கோப்பை என்று கருதப்படும் இந்த உலகக்கோப்பையில் அனைவரின் கவனம் முழுதும் இந்திய அணி மேல் இருப்பதால் அழுத்தத்தை எவ்வாறு கடக்கிறார்கள் என்பதைப்பொறுத்து வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படலாம்.
FILE

இந்தியா ஏன் இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

1. 2007ஆம் ஆண்டு ஏற்பட்ட அவமானகரமான முதல் சுற்று வெளியேற்றத்திற்குப் பதிலடி கொடுக்கவேண்டும்.

2. சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேகிறார். 22 வருட நீண்ட கிரிக்கெட் வாழ்வில் ஒரு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் கூட இந்தியா வெல்லவில்லை என்பது சச்சினுக்கு பெரிய வருத்தமாக போய் விடும் என்பதை விட அவரது ரசிகர்களுக்கும் இந்திய கிரிக்கெட்டிற்குமே பெரிய ஏமாற்றமாகப் போய் முடியும்.

3. உள்நாட்டு மைதானங்களில் விளையாடுவது.

4. தோனி தலைமையில் ஒரு முழு பலம் பெற்ற இந்திய அணி இப்போதுதான் களமிறங்குகிறது. இதற்கு முந்தைய சில தொடர்களில் முன்னணி வீரர்கள் சிலர் இருக்க மாட்டார்கள். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், சேவாக் இல்லாமல் விளையாடியுள்ளார். எனவே இந்த அணியை வைத்துக் கொண்டு தோற்க முடியாது.

5 எல்லாவற்றிற்கும் மேலாக பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் இந்த அணி மீது தன்னலமற்ற ஒரு பிரியம் காட்டி இதன் வெற்றி தோல்விகளில் பங்கு பெற்று அணியை வளர்த்தெடுப்பதில் பெரும் தாக்கம் செலுத்தியுள்ளார். அவர் இந்தியா சாம்பியன் என்ற உணர்வுடன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடுபட பெரிதும் விரும்புவார்.

6. இந்தியாவில் இந்திய ரசிகர்கள் முன்னிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறுவது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே இவ்வளவு அழுத்தங்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

1983ஆம் ஆண்டிற்குப் பிறகு 1987 ஆம் ஆண்டு அரையிறுதி வரை வந்த இந்திய அணி பிறகு 1996ஆம் ஆண்டு அரையிறுதியில் தோல்வி தழுவியது. பிறகு 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணி மறக்கவேண்டிய ஒன்று. 2003ஆம் ஆண்டு முதல் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக மோசமான தோல்வியைத் தழுவ இந்தியாவில் அனைவரது வீடுகளிலும் கல்லடி நடந்தது. அதனை ஒரு பெரிய இழிவாக எடுத்துக் கொண்ட கங்கூலி தலைமை இந்திய அணி வீறுகொண்டு எழுந்து அதன் பிறகு இறுதிப்போட்டியில்தான் தோல்வி தழுவியது. இறுதியில் டாஸ் வென்ற கங்கூலி ஆஸ்ட்ரேலியாவை பேட் செய்ய அழைத்து தப்புக் கணக்குப் போட்டார். முதலில் பேட் செய்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பிருந்திருக்கலாம். ஏனெனில் அதுவரை சச்சின் அந்த உலகக் கோப்பையில் ஆடிய ஆட்டம் பிரமிக்க வைத்திருந்தது.

இதுவரை 36 உலகக் கோப்பை போட்டிகளில் 1,796 ரன்களை எடுத்து முதலிடம் வகிக்கும் சச்சின் டெண்டுல்கரின் உலகக் கோப்பை சராசரி 57.93. ஸ்ட்ரைக் ரேட் 88.21.

FILE
2007ஆம் ஆண்டு அதிசயப் பயிற்சியாளர் கிரெக் சாப்பலின் பரிந்துரையின்படி பலவீன கேப்டன் திராவிடின் தலைமையின் கீழ் உலகக் கோப்பைக்குச் சென்றது இந்திய அணி. அப்போதும் இந்திய அணியே சவாலான அணி என்று எல்லோரும் கூறினார்கள். ஆனால் பயிற்சியாளர் கிரெக் சாப்பல், அவர் கூறியதுதான் அதிர்ச்சியளிக்கும் ஒன்று. 'சீரழிவு காத்திருக்கிறது' என்று அவர் கூறியதாக் அவர் வெளியேறிய பிறகு செய்திகள் வெளியாகின.

அவர் செய்த 'சீர்'(!) திருத்தங்களில் ஒன்றுதான் சச்சின் டெண்டுல்கரை துவக்கத்தில் களமிறக்காமல் 4-வது நிலையில் களமிறக்கச் செய்தது. படுமோசமான முடிவினால் படுமோசமான தோல்வியை இந்தியா சந்தித்தது.

2007ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி

கிரெக் சாப்பலிற்குப் பிறகு இந்திய அணி வீறு கொண்டு எழுந்தது. தென் ஆப்பிரிக்காவை அயர்லாந்தில் ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்தியது. சச்சின் பெரும்பங்கு வகித்தார். இரண்டு சதங்களை தவறவிட்டார். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்று ஒருநாள் தொடரில் 3௪ என்று தோல்வி தழுவியது. ஆஸ்ட்ரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் வென்றது. இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றது. ஆனால் சாம்பியன் கோப்பை போட்டிகளில் படு தோல்வி தழுவி வெளியேற்யது. கடைசியாக வெற்றி பெற்ற பெரியிஅ தொடர் எதுவெனில் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றதே.

ஆனால் இருதரப்பு தொடர்களில் சிறப்பாக விளையாடியது இந்தியா அயல்நாடுகளில் தோனியின் தலைமையில் வெற்றிகளைப்பெறத் தொடங்கியது.

FILE
2007முதல் 2011ஆம் ஆண்டு வரை தோனியின் தலைமையின் கீழ் இந்தியா 93 ஒருநாள் போட்டிகளில் 52 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 34 போட்டிகளில் தோல்வி தழுவியது. வெற்றி/தோல்வி விகிதம் 1.52. இந்திய கேப்டன்களில் தோனிதான் சிறந்தவர் என்பதை இந்தப் புள்ளி விவரம் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக இவர் நிறைய ஒரு நாள் தொடர்களில் முக்கிய வீரர்கள் இல்லாமலே வெற்றியைச் சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1983ஆம் ஆண்டு முதல் இரு அணிகளுக்கு மேற்பட்டு விளையாடிய ஒரு நாள் தொடர் இறுதிப் போட்டிகளில் 59 முறை நுழைந்து 22 முறை வெற்றி பெற்றுள்ளது. 1989ஆம் ஆண்டு வரை இந்தியா ஒருநாள் போட்டிகளில் பெரிய அணியாக இருந்திருக்கவில்லை, ஆனாலும் கபில்தேவுக்கு முந்தைய நிலமையை விட பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால் சச்சின் டெண்டுல்கர் என்ற ஒரு மகான் கிரிக்கெட் வீரரின் வருகைக்குப் பிறகு இந்திய அணியின் ஒருநாள் போட்டிகள் வெற்றிகளை எடுத்துப் பார்த்தால் நமக்குப் புரியும். சச்சின் மட்டுமல்ல கங்கூலி, சேவாக், திராவிட், யுவ்ராஜ் சிங், ஜாகீர் கான், கயீஃப் போன்ற வீரர்களின் வருகை இந்திய அணியின் ஒருநாள் போட்டி ஆட்டங்களை பெருமளவு மேம்படுத்தியது.

1990ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை 257 ஒருநாள் போட்டிகளில் 122 போட்டிகளில் இந்தியா வென்று 120 போட்டிகளில் தோல்வி தழுவியது. ஆனால் 2000 ஆண்டு முதல் தற்போது வரை 307 ஒருநாள் போட்டிகளில் 161 போட்டிகளில் வென்று 130-இல் மட்டுமே தோல்வி தழுவியுள்ளது. 2010முதல் தற்போது வரை 32 போட்டிகளில் 19-இல் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தத்தில் 1974ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 764 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி பெற்றுள்ள 373 வெற்றிகளுக்குக் காரணம் நிறைய வீரர்களின் வருகை, மொகீந்தர், ஸ்ரீகாந்த், கபில்தேவ், சந்தீப் பாட்டீல், யஷ்பால் ஷர்மா தொடங்கி கங்கூலி, சச்சின், திராவிட், ஸேவாக், யுவ்ராஜ் சிங், கயீஃப், ஸ்ரீனாத், பிரசாத், கும்ளே, தோனி என்று இந்தப் பட்டியல் நீளும்.

எல்லா அணிகளையும் போல் இந்திய அணி உள்நாட்டில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் அதிகம் வெற்றி பெற்றுள்ளது.

2011 உலகக் கோப்பையில் இந்தியா

இந்த முறை தோனி தனது அணிச்சேர்க்கையை கவனமாகக் கையாள்வதில் உள்ளது வெற்றி தோல்விகள். சச்சின், சேவாக், கம்பீர், யுவ்ராஜ், தோனி, யூசுப் பத்தான், ரெய்னா, ஹர்பஜன், ஜாகீர், ஸ்ரீசாந்த் முனாஃப் படேல் என்று இருந்தால் பலமாக இருக்கும்.

யுவ்ராஜ் சிங் ஒரு போட்டியில் சொதப்பினாலும் உடனே தூக்கி விட்டு விராட் கோலியை அணியில் சேர்க்கவேண்டும். எந்த முடிவெடுத்தாலும் தைரியமாக விரைவாக தோனி எடுக்கவேண்டும்.

FILE
ரெய்னா சரியாக விளையாடா‌விட்டாலும் இவர் இந்த முடிவை எடுக்கவேண்டும். முதலிலிருந்து அனைத்துப் போட்டிகளையும் வெல்லும் தயாரிப்புடனும், மனோதிடத்துடனும் களமிறங்கவேண்டும், முதல் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் காலிறுதியில் உடனடியாக தோற்று வெளியேறும் நிலை ஏற்படாது. எதிரணியினருக்கு கிலி பிடித்துக் கொள்ளும்.

நெஹ்ராவை அணியில் எடுப்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவேண்டும் ஏனெனில் நெருக்கமான அதிக ஸ்கோர் போட்டிகளில் இவர் நமக்கு தோல்வியைப் பெற்றுதந்து விடுவார் என்ற ரீதியில்தான் உள்ளது இவரது பந்து வீச்சு.

தோனியைப் பொறுத்தவரை உள்ள மிகப்பெரியக் குற்றச்சாட்டு என்னவெனில் நடு ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மென்கள் செட்டில் ஆகும்போது அவர்களை வீழ்த்த எந்த வித முயற்சியும் மேற்கொள்ளாமல் மரத்தை வைத்தவன் தண்ணி ஊற்றுவான் என்பது போல் இருக்கிறார். அந்தப் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். யுவ்ராஜ் சிங், உள்ளிட்ட பகுதி நேர பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்த முனையக்கூடாது. ஜாகீர், ஸ்ரீசாந்த், முனாஃப், ஹர்பஜன் என்று பந்து வீச்சு வரிசை இருந்தால், இன்னும் ஓரிரு பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தலாம் அதுவும் அனுபவமான சேவாக், போன்றவர்களுக்கு 5 ஓவர்களையோ, புது வீரரான விக்கெட் எடுக்கும் யூசுப் பத்தானுக்கோ கொடுக்கலாம்.

காரணமில்லாமல் யுவ்ராஜ், யூசுப், ரெய்னா, சேவாக், சச்சின் என்று அனைவரையும் பயன்படுத்தி ரன்களை வாரி வழங்கும் நிலைக்குச் செல்லக்கூடாது.

எதிரணியினர், அது எந்த அணியாக இருந்தாலும் 300 ரன்களை எட்டிவிடாமல் கட்டுப்படுத்துவது அவசியமாகும் ஏனெனில் எல்லாப்போட்டிகளிலும் 300 ரன்களை நாம் வெற்றிகர்மாகத் துரத்துவது இயலாது.

டாஸ் வென்றால் 300 ரன்களுக்கும் மேல் குவிப்பதுதான் பாதுகாப்பானது. இந்த பலமான பேட்டிங் வரிசையில் சேவாக், சச்சின் துவக்கம் அபாரமாக அமைந்தால் 350 ரன்களும் சாத்தியம்தான்.

யூசுப் பத்தானைக் கண்டு எதிரணியினருக்கு ஒரு புதிய நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தோனி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பேட்டிங் வரிசையில் சேவாக், சச்சின், யுவ்ராஜ், ரெய்னா, தோனி, யூசுப் ஆகியோரது அதிரடியைக் கண்டு நிச்சயம் மற்ற அணிகள் அஞ்சித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. எதிரணியினர்தான் நெருக்கடியில் உள்ளனர். இதனை நன்றாக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

வங்கதேசம், அயர்லாந்து, ஹாலந்து என்று பலவீனமான அணியாக இருந்தாலும் முழு பலம் கொண்ட அணியையஏ களமிறக்கவேண்டும். அதில் தவறுகள் செய்ய வாய்ப்பேயில்லை.

உலகக் கோப்பை போட்டிகள், தோல்வியடைய முடியாது என்ற பயத்தில் பரிசோதனை முயற்சிகளைக் கைவிட்டு விடக்கூடாது. நெருக்கடி தருணங்களில் வழக்கத்திற்கு மாறான உத்திகளைக் கையாள்வதில் தோனி தயக்கம் காட்டக்கூடாது.

பேட்டிங்கில் தோனி தனது பழைய அதிரடி முறையைக் கையாள்வது உசிதம், கிரெக் சாப்பலின் ஒரேயொரு உத்தி அருமையான ஒன்றாகும், துவக்கவ் வீரர்களுக்கு அடுத்த டவுனில் யார் இறங்குவார்கள் என்பதை மற்றி கொண்டேயிருந்தால் நிச்சயம் எதிரணியினரின் திட்டங்களை அது பாழாக்கும்.

இந்த உலகக் கோப்பையில் யு.டி.ஆர்.எஸ். முறை உண்டு. எனவே எல்.பி.டபிள்யூ.முடிவுகளும் 3-வது நடுவரிடம் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் இந்திய பேட்ஸ்மென்கள் எச்சரிக்கையுடன் விளையாடுவது நல்லது.

பேட்டிங் பவர் பிளேயை எப்போது எடுப்பது என்பதிலும், எதிரணியினரின் பேட்டிங் பவர் பிளேயின் போது எந்த பந்து வீச்சாளர்களை வீச அழைக்கவேண்டும் என்பதிலும் தீவிரத் தயாரிப்புகளும் முன் கூட்டிய திட்டமிடுதலும் மிக முக்கியமானது.

FILE
இந்த பேட்டிங் பவர் பிளே என்ற புதிய முறை இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை தோனி இந்த பவர் பிளே விஷயங்களில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் இந்த உலகக் கோப்பையை வெல்வதில் அதிக முனைப்பு காட்டுவார் இந்த அழுத்தம் அவரது பேட்டிங்கில் தாக்கம் செலுத்தாமல் அவர்தான் காத்துக் கொள்ளவேண்டும்.

சேவாகின் அதிரடித் துவக்கம், ரெய்னா, தோனி, யூசுப்பின் இறுதி வேட்டு, ஜாகீர் கான், ஹர்பஜன் ஆகியோரது பந்து வீச்சு, தோனியின் தலைமை உத்திகள், மைதானத்தில் எடுக்கும் உடனடி புத்திசாலி முடிவுகள், சச்சின் டெண்டுல்கரின் பலம் இவையெல்லாம் இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புகளை இந்த உலகக் கோப்பையில் வழங்கியுள்ளது.

இருப்பினும் காலிறுதியிலிருந்து நாக்-அவுட் முறை என்பதால் காலிறுதியிலிருந்து ஒவ்வொரு போட்டியும் தங்களது போக்கையும், நிறத்தையும் எடுத்துக் கொள்ள்ம் என்பதால் எதையும் கணிப்பது கடினம்.

அரையிறுதி வரை இந்தியா வந்து விட்டால் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாகவே நாம் கருதலாம்.

கனவு நனவாகுமா? பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நாம் கனவு காணத்தொடங்குவோம். முடிவஎப்படியிருந்தாலுமரசிகர்களஅதனகிரிக்கெடஆட்டத்தினஅடிப்படையிலபுரிந்தகொண்டவினையாற்றுவதஇந்திகிரிக்கெட்டிற்குசசிறந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்