உலகக் கோப்பை: காத்திருக்கும் கண்ணி வெடிகள்

வியாழன், 17 பிப்ரவரி 2011 (16:38 IST)
webdunia photo
FILE
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் சிறப்பம்சம் என்னவெனில் பொதுவாக பலவீனமான அணிகள் என்று அழைக்கப்படும் 4 டெஸ்ட் விளையாடாத அணிகள் பலம் பெற்று சிலபல அதிர்ச்சிகளை அளிக்கத் தயாராகியுள்ளன என்பதே.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்ட்ரேலியா, நியூஸீலாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய டெஸ்ட் விளையாடும் அணிகளில் வங்கதேசத்தை நாம் விட்டு விடுவோம். ஏனெனில் அன்றைய தினத்தில் அவர்கள் சிறப்பாக விளையாடும்போது எதிரணி எந்த அணியாக இருந்தாலும் வீழ்த்தக் கூடிய திறமை உள்ளது அந்த அணி.

இதனால் மற்ற அணிகளான அயர்லாந்து, கனடா, கென்யா, ஹாலந்து ஆகிய அணிகளின் திறமைகள் பற்றி நாம் பரிசீலனை வேண்டியுள்ளது.

ஏற்கனவே ஜெஃப் மார்ஷ் கூறியுள்ளது போல் ஐ.சி.சி. கூட்டணி உறுப்பு நாடுகளான அயர்லாந்து, கென்யா, ஹாலந்து, கனடா ஆகிய அணிகள் சிறப்பான பலம் பெற்று வந்திறங்கியுள்ளன. ஜிம்பாப்வே இந்த அணிகளை விட சற்றே சீனியர் அணி.

பயிற்சி ஆட்டங்களில் நியூஸீலாந்து அணியை எதிர்கொண்ட அயர்லாந்து நியூஸீலாந்து எடுத்த 311 ரன்கள் இலக்குக்கு எதிராக முதல் 13 ஓவர்களில் 91 ரன்கள் விளாசி கடைசி வரை சவாலாகத் திகழ்ந்து 279 ரன்கள் எடுத்து அதிர்ச்சியளித்தது.

இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயை வீழ்த்தி வெற்றியையும் பெற்றது. கனடா அணி நேற்று இங்கிலாந்துக்கு ஒரு பெரும் அதிர்ச்சி மருத்துவம் அளித்தது.

244 ரன்களுக்கு இங்கிலாந்தை மட்டுப்படுத்தியதுடன், பிறகு துரத்தலில் 28/5 என்று வீழ்ச்சியடைந்த நிலையிலும் விடப்பிடியாக இலக்கைத் துரத்தி ஏறக்குறைய வெற்றி உறுதி என்ற நிலையை எட்டி 227 ரன்களுக்குச் சுருண்டது. ஆனால் இன்னமும் 3 ஓவர்கள் மீதமிருந்தன.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்த அணிகளில் அதிகம் வெற்றி பெற்றுள்ள கென்யாவை, அன்று ஹாலந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.

எனவே கென்யா, அயர்லாந்து, ஹாலந்து, கனடா, ஜிம்பாப்வே ஆகிய அணிகளை நாம் எளிதில் எடைபோட முடியாது.

பிரிவு ஏ-யில் ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகளும், இந்தியா உள்ள பிரிவு- பி-யில் அயர்லாந்து, ஹாலந்து அணிகளும் உள்ளன.

இந்த அணிகள் பற்றி நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:


அயர்லாந்து:

2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சியளித்த அயர்லாந்து அணி இந்த முறை கோப்பையை வெல்வோம் என்று கூறும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வதாக ஜெஃப் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

டிரவர் ஜான்ஸ்டன், கெவின் ஓ'பிரையன், பாய்ட் ரான்கின் ஆகிய முன்னணி மித, ஸ்விங் ரக பந்துவீச்சாளர்களையும் ராபர்ட் வான் டெர்மெர்வ் என்ற ஓரளவுக்கு நல்ல சுழற்பந்து வீச்சாளரக்ளையும் இந்த அணி கொண்டுள்ளது. விக்கெட் கீப்பர் நியால் ஓ'பிரையன் அபாயகரமான பேட்ஸ்மென் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் இவர் தவிர, கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட், அல்கெஸ் கியூசக், எட் ஜாய்ஸ் (இவர் இங்கிலாந்து அணிக்கும் விளையாடியவர்), ஜார்ஜ் டாக்ரெல், ஆந்த்ரே போத்தா போன்ற ஆல்ரவுண்டர்களையும் இந்த அணி கொண்டுள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை 58 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 28-இல் வென்று 24-இல் தோல்வி தழுவியுள்ளது. இதில் கனடா, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து கென்யா ஆகிய அணிகளுக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. தற்போதைய கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் தலைமையில் 21 போட்டிகளில் 13-இல் வெற்றி பெற்றுள்ளது அயர்லாந்து.

கனடா

கனடா அணி இதே நிலையில் உள்ள மற்ற அணிகளை விட பலவீனமாகவே உள்ளது என்பது அதன் இதுவரையிலான வெற்றி தோல்விகளை வைத்து நாம் கூறிவிடமுடியும். மொத்தம் 60 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இதுவரை 16-இல் மட்டுமே வென்று 43-ஐ தோற்றுள்ளது. அதனால் இந்த அணிபற்றி நாம் ஒரு குறைவான மதிப்பீடே வைத்திருந்தாலும்.

ஒரு சில தனிநபர்கள் இந்த அணியில் வெற்றியை தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கக் கூடியவர்களே.

இந்த அணியில் தமிழ்நாட்டு அணிக்கு விளையாடிய பாலாஜி ராவ் என்ற லெக் ஸ்பின்னர் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பயிற்சி ஆட்டத்தில் இவர் முன்னணி இங்கிலாந்து வீரர்களை தன் திறமையால் கட்டுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆட்டக்களங்கள் பற்றி நன்றாகவே அறிந்தவர். எனவே அபாயகரமான லெக்-ஸ்பின்னர் இவர். குர்ரம் ொஹான் என்ற மீடியம் வேகப்பந்து வீச்சாளரும் நம்பிக்கை அளிக்கும் விதமாக வீசி வருகிறார்.

பேட்டிங்கில் 2003ஆம் ஆண்டு சில பல வெடிகளைக் கொளுத்தி போட்ட ஜான் டேவிசன் இப்போதும் உள்ளார். ஆனால் வயது 40 ஆகிவிட்டது. இவர் ஒரு டைனமைட். 2003-இல் மேற்கிந்திய அணிக்கு எதிராக இவர் அடித்த அதிரடி சதமும், பாண்ட் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் இருந்த நியூஸீ அணிக்கு எதிராக அதிரடி 75 ரன்களும் எடுத்து அச்சுறுத்தியதை யாரும் எளிதில் மறக்க முடியாது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இவர் அடித்துள்ள 307 ரன்களில் 35 பவுண்டரிகளும் 13 சிக்சர்களும் அடங்கும். 218 ரன்களை பவுண்டரிகளும் சிக்சர்களுமாகவே அடித்து நொறுக்கியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக 32 வயதான ரிஸ்வான் சீமா உள்ளார். இவர் யூசுப் பத்தான், ரசாக், அஃப்ரீடி ரக வன்கொடுமை ஹிட்டர். துவக்கத்தில் களமிறங்குவார் அல்லது 5 அல்லது 6ஆம் நிலையில் களமிறங்குவார். இவர் விக்கெட்டை வீழ்த்தி விடுவது நல்லது. ஏனெனில் நிற்க வைத்து கட்டுப்படுத்துவது கடினம். இவருக்கு சிக்சர் அடிக்கும் மிஷின் என்ற பெயரும் உண்டு.

இவர் எடுத்துள்ள 523 ஒரு தினப் போட்டி ரன்களில் 67 பவுண்டரிகளையும் 24 சிக்சர்களையும் அடித்துள்ளார் என்றால் நாம் பார்த்துக் கொள்ளலாம். 412 ரன்களை அவர் பவுண்டரிகளிலும் சிக்சர்களிலுமே அடித்துள்ளார். இவர் தவிர குனசேகரா, கேப்டன் பாகாய் ஆகியோரும் நல்ல பேட்ஸ்மென்கள். ரிஸ்வான் சீமா வலது கை மிதவேகப்பந்தும் வீசக்கூடியவர். எனவே இவர் ஒரு அதிரடி ஆல்ரவுண்டர் எனலாம். இவர் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 28/5 என்ற நிலையில் களமிறங்கி 71 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 93 ரன்கள் எடுத்து புகுந்து விளையாடி அச்சுறுத்தினார்.

எனவே கனடா அணியை நாம் எளிதில் எடைபோட முடியாது. அதுவும் பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு கனடா எப்போதும் அபாயகரமான அணியே.

கென்யா

பேட்டிங்கில் பலம் இருக்கும் அளவுக்கு இந்த அணியிடம் பந்துவீச்சு பலம் இல்லை. எனினும் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணிக்கு கொடுத்த அதிர்ச்சியை எளிதில் மறந்து விடமுடியாது. 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய அணியை வீழ்த்தியதையும் மறக்க முடியாது. ஒருமுறை தெனாப்பிரிக்காவில் இந்தியாவையும் வீழ்த்திய அணி கென்யா. செரென் வாட்டர்ஸ் என்ற 20 வயது துவக்க வீரர் உத்தி ரீதியாக ஒரு சிறந்த வீரர். பயிற்சிப் போட்டியில் ஹாலந்துக்கு எதிராக சதம் எடுத்தார்.

ராகேப் படேல் என்ற பின்கள அதிரடி வீரரும் உள்ளார். டிகோலோவுக்கு 41 வயதாகி விட்டது. இருந்தாலும் இவரது பந்து வீச்சில் இன்னமும் விக்கெட்டுகள் சரிந்தே வருகின்றன. காலின்ஸ் ஒபூயா, தன்மய் மிஷ்ரா ஆகிய பேட்டிங் திறமைகளும் உள்ளன. பழைய ஆல் -ரவுண்டர் தாமஸ் ஒடோயோவும் உள்ளார். நல்ல திறமையான அணிதான், எதிரணியினர் கவனமின்றி 240 ரன்களே எடுக்கிறார்கள் என்றால் கென்யா நிச்ச்யம் அந்த இலக்கை எளிதில் துரத்தும் அது எந்த அணிக்கு எதிராக இருந்தாலும் சரி.

ஹாலந்து:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் 12 போட்டிகளில் 5-இல் வெற்றி பெற்றுள்ளது அவ்வளவு மோசமானதாக இல்லை. அதே போல் 57 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 23-இல் வெற்றி பெற்றிருப்பதும் வளரும் அணிக்கன அறிகுறியைக் காண்பிப்பதாக உள்ளது. இந்த அணியிலும் சில தனிப்பட்ட வீரர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள். ரயான் டென் டஸ்சதே என்பவர் இதில் முக்கியமானவர் இவர் ஒரு ஆல்-ரவுண்டர். கனடா அணியை நெதர்லாந்து அணி 6 முறை சந்தித்து 6 முறையும் வெற்றி கண்டுள்ளது. டென் டஸ்சதே 27 ஒருநாள் போட்டிகளில் 1234 ரன்களை 3 சதம், 8 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். சராசரி 68.55. ஒரு நல்ல பந்து வீச்சாளரும் கூட.

துவக்கத்தில் களமிறங்கும் கெர்வீசீ, ஷ்வார்சின்ஸ்கி அபாயகரமான துவக்க வீரர்கள். பின்களத்தில் பர்மன், முதாசர் புகாரி ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுப்பர். பயிற்சி ஆட்டத்தில் அன்று கென்யாவை வீழ்த்தியதிலிருந்து இந்த அணியின் சவால் தன்மை தெரியவந்தது.

இந்த 4 டெஸ்டவிளையாடாஅணிகளதவிநிச்ச்யமஅதிர்ச்சியளிக்கககூடுமஎன்றபலருமகருதுமஅணி ஜிம்பாப்வே, வங்கதேசமஆகியவையாகும்.

பிரவு ஏ-யிலமுன்னணி அணிகளிலநியூஸீலாந்தும், சிவேளைகளிலபாகிஸ்தானுமஇந்அணிகளிடமதோற்வாய்ப்பிருக்கிறது.

பிரிவி-யிலமேற்கிந்திஅணி இருக்குமநிலையிலவங்கதேசம், அயர்லாந்தஅணிகளஅந்அணிக்கஅபாயகரமானதஅயர்லாந்தஅணி மேற்கிந்திஅணியையும், வஙகதேசத்தையும், -ஹாலந்தையுமவீழ்த்திவிமுடிய்மஎனிலசூப்பர் 8 சுற்றுக்குளநுழையுமவாய்ப்பஉள்ளது. அதபோலவங்கதேசமஹாலந்து, அயர்லாந்தஅணிகளவீழ்த்தி மேற்கிந்திஅணியவீழ்த்தினாலகாலிறுதிச்சுற்றுக்கவாய்ப்புள்ளது.

பிரிவு ஏ-யிலஜிம்பாப்வஅணி கன்டா, கென்யஅணிகளவீழ்த்தி பாகிஸ்தானையுமபோராடி வீழ்த்தினாலகாலிறுதி வாய்ப்பஉள்ளது.

மொத்தத்திலவங்கதேசம், அயர்லாந்து, ஹாலந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யஆகிஅணிகளிலஎந்அணி தங்களபிரிவிலஉள்ஒரமுக்கிஅணிக்கஅதிர்ச்சியளித்தாலும் காலிறுதியிலநுழைவாய்ப்பிருக்கிறது.

உண்மையிலபலவீனமாஅணிகளாநாமகருதவேண்டியதநியூஸீலாந்தும், மேற்கிந்தியததீவுகளும்தானஏனெனிலகாலிறுதிக்குததகுதி பெறாமலபோகுமஅணிகளினபட்டியலிலஇந்அணிகளஉள்ளன.

அதனாலஇந்உலகககோப்பையை . முதன்மை 8 அணிகள்தானவரவேண்டுமஎன்விதமாகததயாரித்திருப்பதாகக் ஐ.ி.ி. கூறியதற்கஉண்மையிலஇந்அணிகள்தான். தங்களஆட்டமமூலம் ஐ.ி.ி.யினதிட்டத்திலகரியைப்பூசவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்