ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ரோஹித் ஷர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசுகையில் “ரசிகர்களின் உணர்சிகளை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடிந்ததை மட்டுமே என்னால் கையாளமுடியும். அவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து என் வேலையில் கவனம் செலுத்த விரும்புகிறேன். நான் என்னுடைய முழு கேரியரிலும் ரோஹித்தின் கேப்டன்சியில் விளையாடியுள்ளேன். இப்போது அவர் எனக்கு ஆதரவாக என் தோல் கைபோட்டு இருப்பார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.