ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து வழியில் இந்திய கிரிக்கெட் வாரியமும் செல்லுமா?

சனி, 20 ஆகஸ்ட் 2011 (14:52 IST)
FILE
கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி அல்லது விளையாட்டில் எந்த ஒரு ஆட்டமாக இருந்தாலும், அதாவது தனி நபர் ஆட்டாமாயினும், அணி அளவிலான ஆட்டமாயினும் ஒரு நேரத்தில் வீரர்களும் அவர்கள் சார்ந்த அமைப்பும் அல்லது அவர்களை நிர்வகிக்கும் அமைப்பும் தங்களது செயல்பாடுகளை சோதனைக்குட்படுத்துவது நல்லது.

2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஆனால் அதற்கடுத்த ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0- 5 என்று வெள்ளைச்சலவை செய்யப்பட்டது.

அப்போது, என்ன நடந்தது, வாரியத்தின், பயிற்சியாளர்களின், வீரர்களின் செயல்பாடுகள் என்ன? ஏன் அவ்வாறான ஒரு தோல்வி, வெற்றி ஏற்பட்ட இத்தனை குறுகிய காலத்தில் ஏற்பட்டது என்பதை ஆராய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஸ்கோஃபீல்ட் என்பவரை நியமித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

ஸ்கோஃபீல்ட் அறிக்கையின் பரிந்துரைகளின் படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடந்து கொண்டது. அந்த விசாரணையின் கண்டுபிடிப்புதான் தற்போதைய இங்கிலாந்து பேட்டிங் ஆலோசகர் ஆண்டி பிளவரும், கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராசும். அதோடு அல்லாமல் எந்தத் தரப்பில் கோளாறு நடந்தாலும், அணித் தேர்வு, பயிற்சி, வீரர்கள் அதிருப்தி, என்று அனைத்து விவகாரங்களையும் உடனுக்குடனே கண்டறிய பொது மேலாளர் பதவி ஒன்றையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உருவாக்கியது. அதன் விளைவுதான் இங்கிலாந்தின் இன்றைய நிலை. அதன் பிறகு தொடர்ச்சியாக ஆஷஸை வென்று, இடையே அனைத்து அணிகளையும் வெற்றி கண்டது இங்கிலாந்து.

அந்தப் பாதையைப் பின்பற்றி ஆஸ்ட்ரேலியாவும் தற்போது தனது தொடர் ஆஷஸ் தோல்விகளை ஆராய டான் ஆர்கஸ் தலைமையில் முன்னாள் கேப்டன்கள் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், மார்க் டெய்லர் என்று ஒரு அணியையும் அவருக்கு அளித்து விசாரணை மேற்கொண்டது. அதன் கண்டுபிடிப்புகளை அவர் நேற்று ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.

இந்த விசாரணையில் முன்னாள், இந்நாள் வீரர்கள், கேப்டன்கள், உள்நாட்டு அமைப்பு, ஊடகம் பிற விளையாட்டுத் துறை சேர்ந்த நிபுணர்கள் என்று சுமார் 60க்கும் மேற்பட்டோரை நேர்காணல் கண்டு அவர்களது பரிந்துரைகளையும் கேட்டறிந்துள்ளது.

அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா அதிரடி நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டது. இதில் முதல்படியாக அணித் தேர்வுக் குழு தலைவர் ஆண்ட்ரூ ஹில்டிச் நீக்கப்பட்டார். இவர் இரண்டு தொழில்களை புரிந்தார். ஒன்று வழக்கறிஞராகவும் இருந்தார் பகுதி நேர அணித் தேர்வுக் குழு தலைவராகவும் இருந்தார். இது "விருப்பத்தெரிவுகளின் முரண்" என்று வர்ணிக்கப்பட்டு அவரை உடனடியாக நீக்கி விட்டு முழுநேர தேர்வுக் குழுத் தலைவரை தேர்வு செய்யவுள்ளனர்.

இரண்டாவதாக கிரெக் சாப்பலின் தீவிர "இளம் வீரர் வாதம்" அணியில் வீரர்களிடையே ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது என்று கூறப்பட விளைவு கிரெக் சாப்பலுக்கு கல்தா.

இதோடு மட்டுமல்லாது பயிற்சியாளர் டிம் நீல்சனை அழைத்து வேறு வேலை இருந்தால் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறிவிட்டது கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா.

அனைத்தையும் விட முக்கியமானது, கேப்டன் கிளார்க்கை அணித் தேர்வாளராகவும் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இங்கிலாந்து செய்தது போலவே ஒரு தொடரில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் உடனுக்குடன் கவனிக்க பொது மேலாளரையும் நியமிக்கவுள்ளது கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா. இதனாலெல்லாம் தவறு நடக்க வாய்ப்பில்லை என்று கூற முடியாது என்றாலும் திடீரென ஒரு அணி முதலிடத்திலிருந்து அதல பாதாளத்திற்குச் சரியும் நிலையை தவிர்க்கலாம் அல்லவா? மேற்கிந்திய தீவுகள் போல் நிர்வாகமும் சரியில்லாமல், மேலும் இளைஞர்களுக்கு கிரிக்கெட்டை விட மற்ற ஆட்டத்தின் மேல் கவர்ச்சி ஏற்பட்டு அதில் பெரும்பாலோனோர் சென்றது என்று அடிப்படையே ஆஸ்ட்ரேலியாவுக்கு ஆட்டம் காணவில்லை.

மாறாக சிறந்த வீரர்கள் உள்ளனர். புது முகங்களும் வந்தவண்ணம் உள்ளனர். இருப்பினும் தொடர்ச்சியான தோல்வி ஏன் என்பது ஆய்வுக்குரியதுதானே? இதைத்தான் ஆஸ்ட்ரேலியாவும் செய்தது.

இன்று இந்திய அணி பதட்டமடையத் தேவையில்லை என்றாலும், ஒரு அணியாக இந்திய அணி இது போன்ற படு தோல்விகளை அதுவும் ஒரு போராட்டம் இல்லாமல் சவால் இல்லாமல் சோர்வாக விளையாடியதில்லை என்று நாம் கூற முடியும்.

கிரிக்கெட் வாரியத்தில் ஐ.பி.எல். அணி உரிமையாளர்களஇருப்பதும், வீரர்களை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்துமாறு அளவுக்கு அதிகாமான பணத்தை அள்ளி வழங்கி அவர்களை இந்த தனியார் கிரிக்கெட்டில் பங்கேற்றேயாக வேண்டும் என்ற மறைமுகக் கட்டாயத்தை ஏற்படுத்தியதும் இன்றைய இந்திய அணி வீரர்களின் கடுமையான சோர்வுக்குக் காரணமாகும்.

ஆண்டு முழுதும் இதே வீரர்களை வைத்து விளையாடியபடியே இருந்தால் சோர்வு ஏற்படுவது நியாயம்தானே!

உலகக் கோப்பையை எப்பாடுபட்டாவது வென்றே தீருவது என்று இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டனர் அதற்காக உழைத்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றனர்.

ஒரு பெரிய பரீட்சை முடிந்து அதன் பிறகு வீரர்கள் ரிலாக்ஸ் செய்யக்கூட முடியாமல் ஐ.பி.எல். கிரிக்கெட்டை அடுத்த 4 நாட்களில் நடத்தத் திட்டமிட்டது. அதோடு மட்டுமல்லாமல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தப்படுகிறது. அழுத்தம் அதிகம். அதுவும் ரப்பர் போன்று இழுஇழுவென்று இழுத்து 74 போட்டிகளை நடத்தி அனைத்து வீரர்களையும் பணம் சம்பாதிக்கும் எந்திரமாக மாற்றியுள்ளது பி.சி.சி.ஐ.

10 அணிகள் விளையாடுகிறது என்றால், அதனை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு அணியும் ஒன்றை மற்றொன்று எதிர்த்து விளையாடி பிறகு 4 முதல் நிலை அணிகள் அரையிறுதியில் மோதி பிறகு இறுதிப் போட்டி என்று வைக்கவேண்டியதுதானே? ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடுவது என்றால் அது என்ன கிரிக்கெட்டா அல்லது ஏதாவது கில்லித் தாண்டா?

FILE
சரி! ஐ.பி.எல்-கிரிக்கெட்டை நாங்கள் விட மாட்டோம் அதனை இப்படித்தான் நடத்துவோம் என்றால் ஐ.பி.எல் முடிந்தவுடன் உடனே இரண்டு நாட்களுக்கெல்லாம் மேற்கிந்திய தொடர். இப்படி ஏன் பயணங்களை அமைக்கவேண்டும்?

முதலாமிடம், உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் இவையெல்லாவற்றிற்குப் பிறகு இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியாவில் படு தோல்வி! இதைச் சாதிக்கவா ஒரு கிரிக்கெட் வாரியம் உள்ளது?

இங்கிலாந்தில் வீரர்கள் உண்மையில் கடும் சோர்வடைந்துள்ளது அவர்களின் ஃபீல்டிங், கேட்சிங், குறிப்பாக பந்து வீச்சு ஆகியவற்றிலிருந்து தெரிகிறது.

இஷாந்தின் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம், அவர் பந்து வீச்சு மோசமாகப் போனவுடன் கிரிக்கெட் வாரியம் அதனை மேம்படுத்த அவருக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் ரஞ்சி, துலீப் கோப்பையில் விளையாடினால் ஒருவருக்கும் தெரியாமலே போய் விடுகிறது. இதனால் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தன்னை நிரூபித்து அதன் வழியாக மேற்கிந்தியத்திற்கான பயணத்தில் அணியில் இடம்பெற வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார். இதனால் அவர் 2 மாதகால ஐ.பி.எல்-ற்குப் பிறகு கடும் சோர்வடைந்தார்.

மேற்கிந்திய தீவுகளில் முழு மூச்சுடன் அவர் வீசினார். இதனால் அவர் சோர்வு அதிகமானது. ஸ்ரீசாந்த், ஜாகீர் கான், சேவாக், கம்பீர், கோலி, ரெய்னா, பிரவீண் குமார், சச்சின் டெண்டுல்கர், திராவிட், யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங் அனைத்திற்கும் மேலாக இந்திய கேப்டன் தோனி அனைவரின் சோர்வும் வெளிப்படையாக இங்கிலாந்து தொடரில் தெரிய வந்தது.

எந்த ஒரு அணியும் தோற்க விளையாடாது. ஆனால் விளையாடியே தீர வேண்டிய கட்டாயத்தில் எந்த ஒரு அணியும் திறமையை வெளிப்படுத்த முடியாது. விளையாட்டு என்பது உடல் தன் உற்சாகத்தை வெளிப்படுத்தும் ஒரு இடம். அதனால்தான் விளையாட்டை ஒரு சிறந்த ரிலாக்ஸ் உத்தியாக தத்துவவாதிகளும் சிறந்த தலைவர்களும் பார்த்தனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் வீரர்கள் வெறும் இயந்திரமாகியுள்ளனர்.

இதனால்தான் வீரர்களின் மன உறுதி தோல்வி ஒன்றுமில்லை என்று கூறினாலும், உடல் அதனை எதிர்த்துப் பொராட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.

எனவே வீரர்களை கடும் இயந்திரத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வந்து கிரிக்கெட் ஆட்டத்தை அவர்கள் நேசிக்குமாறுச் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை தீவிர மறு ஆய்வுக்குட்படுத்தவேண்டும்.

இங்கிலாந்து, தற்போது ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியங்கள் செய்தது போல் பி.சி.சி.ஐ-யும் அதன் நிர்வாகிகளும், அதிகாரிகளும் தனித்த ஒரு விசாணை அமைப்பை உருவாக்கி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், பத்திரிக்கைகள், ஊடகங்கள், கிரிக்கெட் பண்டிதர்கள், பிற விளையட்டு நிபுணர்கள், முன்னாள் கேப்டன்கள், முன்னாள் வீரர்கள் இந்திய கிரிக்கெட் நடத்தப்படும் விதம் குறித்து நடுநிலையான விசாரணையை திறந்த மனதுடன் நடத்துவது அவசியமாகிறது.

மொத்தத்திலகிரிக்கெடவாரியத்தினஒட்டமொத்நடவடிக்கைகளையுமதீவிமறவிசாரணைக்குடபடுத்தவேண்டும்.

இதநடக்குமா?

வெப்துனியாவைப் படிக்கவும்