சில செய்யவேண்டிய மற்றும் வேண்டாத ஆன்மீக குறிப்புகள் !!

சுபகாரியம் செய்பவருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருக்கக் கூடாது. சுப காரியத்திற்கு செல்லும் போது வடக்குத்திசை, கிழக்குத்திசை நோக்கிச்  செல்ல வேண்டும்.

தினசரி காலையில் சூரியனையும், தாய், தந்தையையும் வணங்க வேண்டும். சுபகாரியம் தொடங்கும் முன் நம் குலதெய்வத்தை முதலில் வணங்க வேண்டும். நமது மூதாதையர் (முன்னோர்கள்) களை வணங்கிப் பின் சுபகாரியம் தொடங்குவது நல்லது.
 
கிழக்கு நோக்கிச் சாப்பிட்டால் ஆயுள் விருத்தி. மேற்கு நோக்கி சாப்பிட்டால் செல்வ விருத்தி. தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் வளரும். தினசரி தெய்வத்தை  வழிபட்டு உணவு அருந்துதல் எல்லா நன்மைகளும் விளையும்.
 
சூரியனை கிரகணத்தின் போதும், நீரில் சூரியன் பிரதிபலிக்கும் போதும், நடுவானில் (உச்சியில்) இருக்கும் போதும் பார்க்கக்கூடாது. தீபத்தை தெற்கு திசையில் மட்டும் ஏற்றவேகூடாது.
 
கோலம் என்றால் அழகு என்று பொருள். கோலம் போட்ட வீட்டில் துர்தேவதைகள் நுழையாது. எனவே காலையிலும் மாலையில் சாணம் தெளித்து கோலம் போடும்  வழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்.
 
திருமணமான கிரகஸ்தர்கள் தான் அரக்கு, பச்சை, காவி, போன்ற நிறங்களில் வேஷ்டி அணியலாம். பிரம்மச்சாரிகள் வெள்ளை நிற வேட்டியையே அணியவேண்டும். மேலும் யாரும் வெறும் வேட்டியை மட்டும் அணியக்கூடாது. மேலே அங்க வஸ்திரம் அல்லது துண்டு அணியவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்