சகல சௌபாக்கியங்களையும் பெற இந்த நாளில் இதை செய்தாலே போதும் !!

அட்சய திருதியை அன்று அன்னதானம், நீர்மோர் தானம், நன்றாக படிக்கும் ஏழை மாணவ-மாணவிக்கு நம் சக்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை செய்தாலே சொர்கலோக வாழ்க்கை அமையும். 
 

அத்துடன் ஸ்ரீ மகாலஷ்மியை அன்று மனமுருகி பிராத்தனை செய்தால் குபேரர் போல் ஆண்டு முழுவதும் சுபிக்ஷத்தோடு செல்வ வசதியோடு வாழ்க்கை அமையும். இதைதான் எல்லா புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கிறது.
 
அட்சயதிருதியை நாளில் நாம் செய்யும் தானதர்மங்கள் அளவற்ற புண்ணியத்தை சேர்க்கும். “பிறருக்கு நாம் கொடுப்பதெல்லாம் தமக்கே தாம் கொடுத்து கொள்வது” என்பதாகும் என்கிறார் ரமணர். அதாவது நாம் பிறருக்கு கொடுக்கும் தான தர்மங்கள் மூலம் நமக்கு அதற்கேற் பொருட்களும், புண்ணியங்களும்  மீண்டும் கிடைக்கிறது. 
 
அதுபோல், பிறருக்கு தருகின்ற அளவிற்கு வசதி பெருக்கமும் அதிகரிக்கிறது. அட்சயதிருதியை நன்னாளில் சுயநலமான பணிகளை மேற்கொள்வதை விட பிறருக்கு  தேவையான தர்மத்தை வழங்குவது நல்லது.
 
இறைவனுக்கு பொன்-பொருள் தந்துதான் வணங்க வேண்டும் என்றில்லை. நம் தகுதிக்கு ஏற்ப சமர்பித்து வணங்கலாம். குசேலர் ஸ்ரீகிருஷ்ணருக்கு தன் சக்திக்கேற்ப  அவல் மட்டும் தந்துதான் செல்வந்தர் ஆனார்.
 
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும். இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும்  சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்