மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையை விளக்கும் கருட புராணம்

கருட புராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. 
ஒரு உயிர் போன பின் செய்ய வேண்டிய கருமங்களை பற்றி கருட புராணம் இப்படி கூறுகிறது .இறந்த உயிர் பிரேத ஜென்மம் எடுக்கும் ,இறப்பதற்கு முன்பே  ஒவொருவருக்கும் பிரேத ஜென்மம் எடுத்தாலும் முக்தியை நோக்கி சென்றிட தோதாக 'விருஷேஷ சர்க்கம் 'என்னும் தான தர்மங்களை செய்ய வேண்டும்.

எப்படி  கட்டு சாதமுடன் பயணம் செய்பவன் பசியறியாது பயணிப்பானோ அப்படித்தான் தர்மம் செய்தவன் உயிர் தான தர்மத்தால் விளைந்த புண்ணியத்துடன் இறந்த பிறகு பசி, தாகமற்று செல்ல வேண்டிய இடம் செல்வான் தானா தர்மங்களில் தலையானது உத்தம பிராமணனுக்கு சோறிடுவது, அவனை ஏமாற்றாமல் இருப்பது  அடுத்து பசுவை போஷிப்பது, அதை தானமாக பிறருக்கு கொடுப்பது இவைகளை செய்த ஒருவன் உயிர் உடம்பை விட்டு பிரிந்த பின் நற்கதியை நோக்கியே  செல்லும், அதே சமயம் இறந்தவன் சார்பாக அவனது உற்றார், உறவினர்களும் இந்த தர்ம காரியங்களில் ஈடு பட வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்