கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை அருகே சின்னபேயனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவருக்கு எட்டு வயதில் தமிழ்செல்வன் என்ற மகனும் 3 வயதில் நந்தினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நரசிம்மன் இன்று காலை கே.ஆர்.அணை பகுதியில் உள்ள தனது மல்லிகை தோட்டத்தில் பூ பரித்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் வளர்த்து ஆடு அணையில் தண்ணீர் அருந்த சென்றுள்ளது. நரசிம்மன் தனது மகன் மற்றும் மகளை அனுப்பி ஆட்டை பிடித்து வருமாறு கூறியுள்ளார்.