தீபாவளியின் போது விளக்கேற்றுவதன் முக்கியத்துவம் என்ன...?

இந்து மதத்தில் வெளிச்சம் என்பது மிகவும் முக்கியமானதாகும். அது தூய்மை, நன்மை, அதிர்ஷ்டம் மற்றும் சக்தியை குறிக்கும். வெளிச்சம் இருக்கிறது என்றால் இருள் நீங்கி தீய சக்திகள் விலகுகிறது என்று அர்த்தமாகும்.

தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது இந்துக்களின் பாரம்பரியமாகும். விளக்கேற்றுவது ஆன்மீகத்தின் வெளிப்பாடு. விளக்கேற்றுவதால் அறியாமை இருள் விலகி, அறிவு பெருகுகிறது. வீடு புனிதமடைகிறது. வளமும் ஆரோக்கியமும் செல்வமும் அதிகரிக்கிறது. நமது வாழ்வின் பாவங்களை துடைக்கின்றது. மனதின்  தீய எண்ணங்களை எரிக்கின்றது.
 
தீபாவளி என்பது அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது. அந்நேரம் உலகமே இருளில் மூழ்கியிருப்பதால், லட்சக்கணக்கான விளக்குகளை ஏற்றி இருளை விலக்க மக்கள் முற்படுவர். பொதுவாக இருள் நிலவும் போது, தீய சக்திகள் உலவும் என்று நம்பப்படுகிறது. அதனால் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் விளக்கேற்றி, தீய சக்திகளை வலுவிழக்கச் செய்வதாக நம்பப்படுகிறது. 
 
ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் ஆன்மீக ஒளியை வெளியிலும் ஒளிரச் செய்ய வேண்டும் என்பதை குறிக்கவே அதனை செய்கின்றனர். மேலும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அது உணர்த்தும். 
 
தீபாவளியின் போது விளக்கேற்றுவது என்பது ஆன்மிகம் மற்றும் சமுதாய ரீதியாக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்