நரக சதுர்த்தசி ஸ்நானம் என்பது என்ன? அதன் சிறப்புக்கள் என்ன...?

ஐப்பசி மாதம் அமாவசைக்கு முந்தைய நாளான 'சதுர்த்தசி'க்கு சிறப்பு உண்டு. இதை 'நரக சதுர்த்தசி' என்பர்.

நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.
 
எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
 
அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து மங்கள ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று எண்ணெயில் அலை மகளும் நீரில் கங்கையும் உறைந்திருப்பர்.
இந்த நாளில் எண்ணெய் தேய்த்து நீராடினால் ஏழ்மை அகலும். தூய்மை சேரும் என்கிறது தர்ம சாஸ்திரம்.
 
சாதாரண நாளில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ஏற்காத தர்ம சாஸ்திரம் இந்த சதுர்த்தசியில் மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை கட்டாயப்படுத்துகிறது. நீடாடிய பிறகு எமதர்மராஜனை வழிபட வேண்டும். எமனது பதினான்கு பெயர்களையும் பதினான்கு முறை குறிப்பிட்டு கைகளால் நீரை அள்ளி அளித்தாலே போதுமானது.
 
'சதுர்த்தசி' என்றால் பதினான்கு. சந்திரன் ஒவ்வொரு கலையாகத் தேய்த்து தேய்ந்து அன்று 14-வது கலையோடு மிஞ்சி இருப்பான். முன்னோர் ஆராதனைக்கு சந்திரனின் கலையை வைத்து சிரார்த்த நாளை நிர்ணயம் செய்வோம்.
 
சந்திரனும் எமனும் முன்னோர்களை வழிபடும் போது இவர்களையும் சேர்த்துக் கொள்வது வழக்கம். சந்திரனின் பதினான்காவது கலையே நீராடும் வேளை. பதினான்கு வடிவில் தென்படுபவன் எமன்.
 
ஐப்பசி மாத சதுர்த்தசியில் (14-வது திதி) அதிகாலையில் எண்ணெய்யில் அலைமகளும், நீரில் கலைமகளும் அவர்களுடன் எமதர்மராஜனும் பிரச்சன்னமாவர். இந்த மூன்று பேரும் ஒன்று சேரும் சிறப்பு வேளை அது.
 
வாழ்க்கை செழிக்க பொருளாதாரம் தேவை, இதற்கு அலைமகளின் அருள் வேண்டும். வாழ்க்கையை சுவைக்க துய்மையான மனம் தேவை. இதற்கு கங்கையின் அருள் வேண்டும். நரக வேதனையில் இருந்து விடுபட, ஏழைகளுக்கு தீபத்தை கொடையாக அளித்து அவர்களையும் எம வழிபாட்டில் சேர்க்க வேண்டும்.
 
புத்தாடை அணிந்து எமனுக்கு தீபம் ஏற்ற வேண்டும். ஒளிமயமான வாழ்க்கையைப் பெற அது உதவும். தீபத்தை ஏற்றினால் அறியாமை அகன்று விடும். நரக வேதனை யில் இருந்து விடுபட தீபங்களை வரிசை யாக ஏற்ற வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்