கரூர் அருகே ஸ்ரீ சப்தகன்னிமார் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

கரூர் அருகே ஸ்ரீ சப்தகன்னிமார் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் அடுத்துள்ள ஆத்தூர் பூலாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ சப்தகன்னிமார் ஆலயம். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்  கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்தாண்டு இன்று 14-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 12-ம் தேதி, மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியதை தொடர்ந்து மஹா சாந்தி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு  நிகழ்ச்சிகள் என நான்கு கால பூஜைகளும் நடைபெற்றது.
 
தொடர்ந்து இன்று காலை 7:25 மணி அளவில் ஆலய கோபுர கலசத்திற்கு முரளி சிவாச்சாரியர் புனித தீர்த்தம் ஊற்றினர். பின்னர் ஆலயத்தில் உள்ள விநாயகர் மற்றும் ஸ்ரீ சப்தகன்னிமார்களுக்கும் சிறப்பு மஹா தீபாரதனை நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் கோவில் கமிட்டி சார்பில் செய்திருந்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்