செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. அதற்கு ஆன்மிகத்தில் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன.
மகாலஷ்மி படத்திற்க்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதென்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் சிறந்த வசியமாகும்.
சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகு கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும். அப்போதுதான் மகாலஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.