சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் பெளர்ணமி வருவது இன்னும் சிறப்புக்கு உரியது. எனவே வீட்டில் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுங்கள். பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றிவைத்து வழிபடுங்கள். வீட்டின் தரித்திரம் அகலும். ஐஸ்வர்யம் குடிகொள்ளும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் தங்கும்.