போகி பண்டிகை அன்று இந்திர விழா கொண்டாடுவது ஏன் தெரியுமா....?

வியாழன், 13 ஜனவரி 2022 (16:00 IST)
போகம் என்றால் மகிழ்ச்சி, இன்பத்தை குறிக்கிறது. போகம் என்ற சொல்லிற்கு அதிபதியாக விளங்குபவர் இந்திர பகவான். விவசாய மக்களுக்கு விவசாயம் செய்யும் நேரத்தில் மழையை பொழிகின்ற இந்திர பகவானை சிறப்பிக்கும் விதமாக போகி பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.


தான் மழை பொழிவதால் மட்டுமே விவசாயம் செழிப்பாக இருக்கிறது என்ற கர்வத்தால் இந்திரனுடைய ஆணவத்தை குறைக்க கோகுல கிருஷ்ணன் இந்திரனின் வழிபாட்டை தடுத்து கோவர்த்தன மலைக்கு வழிபாடுகள் செய்வதற்கு மக்களை திசை திரும்பிவிட்டார். இதனை கண்ட கோபம் அடைந்த இந்திரன் ஏழு நாட்கள் விடாமல் பெருமழை பொழிய செய்து மக்களை துன்புறுத்தினான்.

மக்களை துன்பத்திலிருந்து பாதுகாக்க கோவர்த்தன மலையை குடை போன்று தன்னுடைய ஒற்றை விரலால் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினார். ஆணவத்தை துறந்த இந்திரன் கிருஷ்ணரை பணியவே கிருஷ்ணர் போகி பண்டிகை அன்று இந்திர விழாவை கொண்டாட வரம் கொடுத்தார்.

இந்திரன் மட்டுமல்லாமது சுக்கிர பகவானும் போகத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும்பொழுது அவன் மிகவும் வசதி வாய்ப்புடன் இருக்கிறான். தேவையற்ற, வீணான, பழைய ஆகிய சொற்களுக்கு முதன்மை பெற்றுள்ளவர் சனீஸ்வர பகவான்.

போகி பண்டிகை அன்று வீட்டில் இருக்கக்கூடிய தேவையில்லாத பொருட்களையெல்லாம் எரித்து, அன்றைய தினத்தில் சனி பகவானின் அருளை பெற்று இந்த வருடம் நல்ல பொலிவுடன் அமைந்து புதிய பானையில் இனிப்பான சர்க்கரை பொங்கல் படைத்து சுக்கிர பகவானின் அருளையும் பெற்றுக் கொண்டு, பழைய பிரச்சனைகள் அனைத்தும் விலகி புதிய பாதை நோக்கி வழிப்படுவதே போகி மற்றும் பொங்கல் பண்டிகையின் சிறப்பாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்