தீப தானம் செய்வதால் என்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா...?
லட்சுமி தேவியே தீப மங்கள ஜோதியாக விளங்குபவள். இல்லங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொண்டு அந்தி மயங்கியதும் தீபம் ஏற்றி தெய்வத்தை தொழுவதால் லட்சுமி விஜயம் செய்வாள்.
ஆலயங்களில் விளக்கு ஏற்றுவது மாபெரும் புண்ணியம். பண்டைக் காலத்தில் நம் முன்னோர்கள் கோவில்களில் விளக்கு எரிய காணிக்கை அளித்ததுடன் அந்த விளக்கினை எரிய நெய் இடுவதற்காக பல நிவந்தங்களும் ஏற்படுத்தி இருந்தனர்.
இஷ்ட தெய்வ சன்னதியில் பெளர்ணமி நாளன்று 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.
திருமணமாகி புதுக் குடித்தனம் செய்யப்போகும் பெண்ணுக்கு அளிக்கும் சீர்வரிசைகளில் குத்துவிளக்கு முதலிடம் பெறுகிறது. சில திருமண சடங்குகளில் ஏற்றி வைத்த குத்துவிளக்கை மணமக்கள் வலம் வருவது உண்டு.
நெய்-நாதம், திரி-பிந்து, சுடர்-திருமகள், தீப்பிழம்பு-கலைமகள், தீ-சக்தி. குத்துவிளக்கு நம் உடலிலும் இருக்கிறது. அடிப்பாகம் நாபிக்குக் கீழ் உள்ள மூலாதாரம். மேல்நோக்கி ஓடும் சுசூம்னா நாடியே விளக்கின் தண்டு. கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தலைப்பாகம். புருவ மத்தியில் ஜோதி ஜோலிப்பதே குத்துவிளக்கின் சுவாலை. ஆத்ம ஜோதியை வணங்குவதே தீப பூஜையின் தத்துவம்.
ஊஞ்சலில் மணமக்கள் மனமகிழ உட்கார வைத்து தீபத்தை எடுத்துக் கொண்டு சுமங்கலிகள் சுற்றி வருவதைக் கவனித்திருக்கலாம். தீப தானத்தை சூரிய உதயத்திற்கு முன்பே தர வேண்டும் என்ற நியதி பின்பற்றப்பட்டு வந்தது. எமன் இந்த தீப தானத்தினால் மிகவும் திருப்தி அடைகிறான் என்று சொல்லப்படுகிறது.
தென்னிந்தியாவில் 16 வித தீப தானங்கள் இருந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. பனை ஓலையில் படகு மாதிரி செய்து அதில் தீபம் ஏற்றி தானம் செய்வது.
திருக்கோவிலில் தீபம் ஏற்றி வந்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம். தீப தானம், எதிர்பாராத யோகத்தை கொடுக்கும். இது உண்மையிலும் உண்மை என்கிறது சாஸ்திரம்.