அட்சய திருதியை நாளில்தான் இத்தனை விஷயங்கள் நிகழ்ந்ததா...?

அட்சய திருதியை நாள் என்பது, சித்திரை மாத வளர்பிறையில் வருவதாகும். இந்த நாளில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றிருப்பதாக ‘பவிஷ்ய புராணம்’  தெரிவிக்கிறது.

தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
 
பாண்டவர்கள் வனவாசம் அனுபவித்த காலத்தில், அவர்களுக்கு சூரியனிடம் இருந்து அட்சய பாத்திரம் கிடைத்தது. அது கிடைக்கப் பெற்றது, அட்சய திருதியை  நாளில்தான்.
 
ஐஸ்வரிய லட்சுமி, தான்ய லட்சுமி ஆகியோர் அவதரித்ததும், குபேரன் தன்னிடம் உள்ள நிதிகளை ஈசனிடம் இருந்து பெற்றதும் இந்த நாளில்தான்.
 
இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். 
 
இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
 
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. 
 
குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.  அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்யலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்