ஒரு திருமண பந்தத்தை ஏற்படுத்தவும், அவ்வாறு திருமணம் செய்துக்கொண்ட தம்பதியர் மன ஒற்றுமையுடனும், குழந்தை செல்வத்துடன் மகிழ்வுற்றிருக்க இறைவன் அருள் வேண்டி இருக்கும் விரதமே பங்குனி உத்திரம்.
இந்நாளில் விரதமிருந்து இறைவனை தியானித்து ஆலயங்களுக்கு சென்று,அங்கு நடக்கும் தெய்வத்திருமணங்களை தரிசித்து, இல்லாதவருக்கு இயன்றளவுக்கு உதவிகள் செய்து வந்தால் திருமண வாழ்க்கை நல்லபடியா அமையும். எல்லா நாளிலும் இறைவனை வணங்கலாம். ஆனால், குறிப்பிட்ட நாளில் இறைவனை வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும்.
இன்று சிவன் - பராசக்தி, ஶ்ரீராமர் - சீதை, முருகப் பெருமான் - தெய்வானை, ஆண்டாள் - ரங்கமன்னார், அகத்தியர் - லோபாமுத்திரை, ரதி - மன்மதன், இந்திரன் - இந்திராணி, நந்தி - சுயசை, சாஸ்தா - பூரணை, புஷ்கலை; சந்திரன் - 27 நட்சத்திர பெண்டிர் என ஏகப்பட்ட தெய்வத்திருமணங்கள் நடந்தேறியது இந்நாளில்தான்.