தர்ப்பை, நாணல், யாவைப் புல், அறுகு, நெற்புல், விழல்மற்ற தானியங்களின் புல், மருள்பட்டை, சவட்டை கோரைப்புல், கோதுமைப்புல் ஆகியன பத்து விதமான தர்ப்பைகள் ஆகும்.
தர்ப்பையை கொய்யும் முறை: தர்ப்பையை அமாவாசையில் கொய்தால் ஒருமாதம் பயன்படுத்தலாம். பௌர்ணமியில் கொய்தால் ஒரு பட்சம் உபயோகிக்கலாம். பாத்திரபத மாதத்தில் (புரட்டாசி) கொய்தால் ஆறு மாதங்கள் பயன்படுத்தலாம். சிராவண மாதத்தில் (ஆவணி) கொய்தால் ஒரு வருடம் உபயோகிக்கலாம். ஆனால் சிரார்த்த காலத்தில் கொய்தால் அன்றே உபயோகிக்க வேண்டும்.
தர்ப்பையின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், முனையில் ஈசனும் இருப்பதாக புராணங்கள் சொல்கிறது. அநேக மகிமைகள் உள்ள இந்த தர்ப்பை புல்லிற்கு மருத்துவ குணங்களும் அதிகம் இருக்கிறது.