அதிர்ஷ்டம் நம்மை விட்டு போகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்...?

நாம் வீட்டில் பயன்படுத்தும் பூஜை பொருட்களை வெளியாட்கள் வந்து இரவலாக கேட்கும்போது தயவு செய்து அதை, புண்ணிய காரியம் என்று நினைத்து தானமாகக் கொடுத்து விடாதீர்கள். 
 


சில பேர் வீட்டில் பெரிய பெரிய விசேஷங்களுக்கு பயன்படுத்தும் பெரிய அளவிலான குத்துவிளக்குகள் இருக்காது. நம்முடைய வீட்டில் நாம் ஏற்றி பயன்படுத்தி இருக்கும் குத்துவிளக்கு இருக்கும். 
 
பண்டிகை விசேஷ நாட்களில் விசேஷத்திற்கு பயன்படுத்திக்கொள்ள குத்துவிளக்கு தேவைப்படும். அதை நம் வீட்டில் வந்து இரவலாக கேட்கலாம். அப்படி கூட நம்  வீட்டில் ஏயற்றிய குத்துவிளக்கை அடுத்தவர்களுக்கு இரவலாக கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. 
 
அதாவது நலுங்கு வைப்பதற்கு, ஹோமம் வளர்ப்பது, வீட்டில் பெரிய பூஜைகள் வைப்பது, இப்படிப்பட்ட பெரிய விசேஷங்களை நடத்தும்போது குத்துவிளக்கிற்கு  முதல் இடம் உண்டு. 
 
நம் வீட்டில் ஏற்றி வழிபாடு செய்த குத்துவிளக்கை அடுத்தவர்களுக்கு நாம் இரவலாகக் கொடுக்கும்போது, நம் வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யம், லட்சுமி கட்டாயம்,  அதிஷ்டமும் அவர்களது வீட்டிற்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. 
 
முடிந்தவரை குத்துவிளக்கு, பஞ்ச பாத்திரம், கலசம் என்று சொல்லுவார்கள் அதாவது, வீட்டில் விசேஷ பூஜைகள் வைக்கும்போது ஹோமங்கள் நடக்கும் போது நூல்  சுற்றி கலசம் நிறுத்துவார்கள் அல்லவா, செம்பு, பித்தளை சொம்பு, இப்படிப்பட்ட நம் வீட்டில் பூஜைக்குப் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் எக்காரணத்தைக்  கொண்டும் அடுத்தவர்கள் வீட்டு விசேஷத்திற்கு கூட இரவல் கொடுப்பது அவ்வளவு சரியான முறையல்ல.
 
உங்கள் வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றல் அவர்கள் வீட்டிற்கு சென்று விடும். பழுதான, பழைய பூஜை ஜாமான்களை கடையில் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக வேறு பொருட்களையோ அல்லது காசாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்