அஷ்டதிக் பாலகர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

அஷ்டம் என்ற சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். எட்டு திசைகளுக்கு உரிய காவலர்களையே, ‘அஷ்டதிக்கு பாலகர்கள்’, ‘எண்திசை நாயகர்கள்’ என்று  அழைக்கிறோம்.

இந்திரன்: கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர், இந்திரன். இவரே தேவர்கள் அனைவருக்கும் தலைவராக உள்ளார். இவரது மனைவி இந்திராணி. இவரே அஷ்டதிக்கு பாலகர்களின் தலைவராகவும் இருக்கிறார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.
 
அக்னி தேவன்: தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர். வேள்வியின்போது இடப்படும், நைவேத்தியப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவியின் பெயர் சுவாகா தேவி.
 
எமன்: தெற்கு திசையின் காவலராக இருப்பவர் எமதர்மன். இவர் தரும தேவன், காலதேவன், எமதர்மராஜா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். சூரிய பகவான்  மகனான இவர், தேவர்களுள் மிகவும் மதி நுட்பம் மிகுந்தவராக கருதப்படுகிறார்.
 
வருண பகவான்: மேற்கு திசையின் காவலராக இருப்பவர் வருணன். இவரை மழையின் கடவுள் என்று போற்றுகிறார்கள். இவரது மனைவியின் பெயர் வாருணி.  இவரை வழிபாடு செய்தால், தேவையான மழை கிடைத்து உணவு, பஞ்சம் நீங்கும்.
 
நிருதி: தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி தேவனின், மனைவி பெயர் கட்கி. இவரை வழிபாடு செய்தால், எதிரிகளின் பயம் நீங்கும். வீரம் பிறக்கும்.
 
வாயு பகவான்: வடமேற்கு திசையின் காவலர் தான் இந்த வாயு பகவான். சிரஞ்சீவியும், இவரது மனைவியின் பெயர் வாயு ஜாயை.இவரை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தி கூடும்.
 
குபேரன்: வடக்கு திசையின் அதிபதியானவர் குபேரன். இவர் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறார். இவரது மனைவியின் பெயர் யட்சி என்பதாகும். இவரை  வழிபாடு செய்வதால், சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
 
ஈசானன்: வடகிழக்குத் திசையின் அதிபதியான ஈசானன், மங்கலத்தின் வடிவமாக பாவிக்கப்படுகிறார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று ஈசானம் என்பது  குறிப்பிடத்தக்கது. ஈசானனின் மனைவி பெயர் ஈசான ஜாயை. இவரை வழிபாடு செய்வதன் மூலமாக ஞானத்தைப் பெறமுடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்