கணபதியும் அவர்களுடைய வேண்டுக்கோளுக்கிணங்க அவனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். கடுமையான சண்டையில் விநாயகப் பெருமான், தனது ஒரு தந்தத்தை ஒடித்து கஜமுகாசுரன் மீது எறிந்தார். கீழே விழுந்து இறந்தவன் போல நடித்த அவன், திடீரெனப் பெருச்சாளி ரூபம் எடுத்து கணேசர் மீது பாய்ந்தான்.
பெருச்சாளி இருளை விரும்பும். கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். எனவே அது அறியாமையையும் ஆணவத்தையும் குறிக்கிறது. ஆகவே பெருச்சாளியை பிள்ளையார் தமது காலின் கீழ் கொண்டிருப்பதன் அர்த்தம், அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை புலப்படுத்தவே கணபதி பெருச்சாளியை வாகனமாக கொண்டுள்ளார்.