சிவபெருமான் தாண்டவம் ஆடிய முக்கிய இடங்கள் என்ன தெரியுமா...?

சிவபெருமான் யோக நிலை மற்றும் தாண்டவ நிலை என இரண்டு நிலையில் காணப்படுகிறார். இதில் யோக நிலை பொருள் இல்லாத நிலை என்றும் தாண்டவ அல்லது லாஸ்ய நிலை பொருள் சார்ந்த நிலை என்று அழைக்கப்படுகிறது.


* மதுரை - வரகுன பாண்டியனுக்கு காலமாறி (வலதுபாதம்) தூக்கி ஆடியது.
 
* கீள்வேளூர் - அகத்தியருக்கு 10 கைகளுடன் நடராஜர் கால்மாறி (வலதுபாதம்) தூக்கி ஆடியது.
 
* திருவாலங்காடு, சிதம்பரம் - இறைவன் காளியுடன் நடனமாடியது.
 
* மயிலாடுதுறை - அம்பாள் மயில் வடிவம் கொண்டு ஈசன் முன்பு கௌரி தாண்டவம் ஆடினார்.
 
* திருப்புத்தூர் - சிவன் லட்சுமிக்கு கௌரி நடனத்தை ஆடி காட்டியது.
 
* திருவிற்கோலம் - காளி அம்மன் ஆலங்காடு பெருமானோடு தர்க்கித்து ரக்ஷா நடனம் ஆடி மகா தாண்டவம் ஆடியது.
 
* திருவாவடுதுரை - இறைவன் வீர சிங்க ஆசனத்தில் சுந்தர நடனம் மகா தாண்டவம் ஆடியது.
 
* திருக்கூடலையாற்றார் - பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டியது.
 
* திருவதிகை - சம்பந்தருக்கு இறைவன் திருநடனம் ஆடிகாட்டியது. இறைவி பாட இறைவன் ஆடியது.
 
* திருப்பனையூர் - ஊரின் புறந்தே சுந்தரமூர்த்திக்கு நடன காட்சி தந்தது.
 
* திருவுசாத்தானம் - விஸ்வாமித்திரருக்கு நடன காட்சி தந்தது.
 
* திருக்களர் - துர்வாச முனிவருக்கு பிரம்ம தாண்டவம் ஆடி காட்டியது.
 
* திருவான்மியூர் - வான்மீகி முனிவர்க்கு இறைவன் பிரம்ம தாண்டவ நடன காக்ஷியும் கல்யாண காட்சியும் அருளியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்