காட்டு ஷியாம்ஜி கோயில்

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள காட்டு ஷியாம்ஜி கோயிலுக்கு இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்லப் போகிறோம்.

ஷியாம்ஜி என்பது கடவுள் கிருஷ்ணரின் ஒரு அவதாரமாக நம்பப்படுகிறது.

இந்த கோயில் மிகப் பழமையான வரலாற்றைக் கொண்டது. ஆனால் தற்போது நாம் பார்க்கும் கோயில் 1720ஆம் ஆண்டில்தான் கட்டப்பட்டது. இதற்கு முன்பு அங்கிருந்த கோயிலை 1679ஆம் ஆண்டில் ஒளரங்கஜேப் பட்டாலியனால் இந்த கோயில் இடித்துத் தள்ளப்பட்டது.

பீமாவின் பேரன் பார்பரிக் மற்றும் மகன் கடோட்கட்ச் ஆகியோரும் இந்த கோயிலுக்கு வந்து ஷியாமை (கிருஷ்ணரை) வழிபட்டுள்ளனர்.

பங்குனி மாதத்தில் வரும் சுக்லபட்சத்தில் இங்கு திருவிழா நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இந்த திருவிழா சமயத்தில் லட்சக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வந்து ஷியாம்ஜியை வணங்கிச் செல்வார்கள் என்று அங்கு இருக்கும் வியாபாரி ஒருவர் கூறுகிறார்.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசியிலும், பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்களின் நீண்ட வரிசைகளையும் காண முடிகிறது.

ஒவ்வொரு நாளும் ஷியாம்ஜிக்கு 5 ஆரத்திகள் எடுக்கப்படுகின்றன. காலை 5 மணிக்கும், 7 மணிக்கும், 12.15 மணிக்கும், 7.30 மணிக்கும், 10 மணிக்கு என ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு ஆரத்திகள் எடுக்கப்படுகின்றன. கோடை காலத்தில் இந்த நேரங்கள் சிறிது மாற்றப்படும்.

கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச ஏகாதசியை ஷியாம்ஜியின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த சமயத்தில் மட்டும் கோயில் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

webdunia photoWD
காட்டு ஷியாம்ஜி கோயிலைச் சுற்றி ஷியாம் தோட்டமும், ஷியாம் குளமும் உள்ளது. இது அங்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்கிறது.

எப்படிச் செல்வது

சாலை மார்கமாக : ஜெய்ப்பூர் மற்றும் சிக்கார் பகுதிகளில் இருந்து பேருந்து, டேக்ஸி, ஜீப்ஸ் ஆகியவை செல்லும்.

ரயில் மார்கமாக : ரிங்குஸ் ஜங்ஷன் (15 கி.மீ.) ரயில் நிலையம்தான் அருகில் இருக்கிறது.

விமான மார்கமாக : கோயிலில் இருந்து 80 கி.மீ. தொலைவில் ஜெய்ப்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது.