அரண்முலாவின் பார்த்தசாரதி கோயில்

திங்கள், 4 மே 2009 (16:35 IST)
கேரளாவில் இருக்கும் பழம்பெரும் கோயில்களில் அரண்முலாவில் உள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலும் ஒன்று. கோயிலின் மூல தெய்வம் பார்த்தசாரதி. இந்த கோயில் புனித நதியான பம்பையின் கரையோரத்தில், பத்தினம்திட்டா மாவட்டம் அரண்முலாவில் அமைந்துள்ளது.

இந்த கோயில் பாண்டவர்களில் ஒருவராக அர்ஜூனன் கட்டியதாக நம்பப்படுகிறது.

போரில் ஆயுதமில்லாமல் நின்ற கர்ணனைக் கொன்றதன் பாவத்தை போக்க அர்ஜூனனால் இந்த கோயில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்த கோயில் பற்றி மற்றொரு கருத்தும் நிலவுகிறது. அதாவது, இந்த கோயில் முதலில் சபரிமலை அருகே உள்ள நிலக்கல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டதாகவும், பின்னர் 6 மூங்கில்களைக் கொண்டு செய்யப்பட்ட மிதவையின் மூலம் இங்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. மேலும், அதனாலேயே இப்பகுதிக்கு அரண்முலா (ஆறு மூங்கில் கொம்புகள்) என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி கொண்டு செல்லப்பட்டு சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுவது வழக்கம். மேலும், ஓணம் திருவிழாவின் போது நடைபெறும் அரண்முலா படகுப் போட்டியும் எல்லோரும் அறிந்த திருவிழாவாகும்.

webdunia photoWD
இந்த கோயில் கேரள மாநிலத்தின் பாரம்பரிய கட்டடக் கலையின் படி அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூலவர் ஸ்ரீபார்த்தசாரதி ஆறு அடி உயரத்தில் வீற்றிருக்கிறார். கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்கள் வீற்றிருக்கின்றன.


webdunia photoWD
ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதத்தின்படி மீனம் மாதத்தில், கோயிலின் கருவறையில் மூலவரை வைக்கப்பட்டதன் ஆண்டு விழா 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும்.

வசந்த காலத்தின் துவக்கத்தில் அரிசி மற்றும் விளை பொருட்களை அருகில் உள்ள உறவுகளுக்கு படகுகளில் அனுப்பி வைக்கும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தது. அதைத்தான் தற்போது படகுப் போட்டியாக கொண்டாடி வருகிறோம்.

இந்த திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற்று ஆராட்டு என்ற பம்பா நதியில் நீராடுதல் நிகழ்ச்சியோடு முடிவடையும்.

கந்தவனதஹனம் என்ற மற்றொரு திருவிழாவும் தனுசு மாதத்தில் இங்கு பிரபலமாக கொண்டாடப்படுகிறது. இதில், கோயிலின் முன்பு காய்ந்த மரங்களைக் கொண்டு காடு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு தீயிடப்படுகிறது. மகாபாரதத்தில் காடு தீப்பற்றிக் கொண்டதை நினைவுகூரும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தியும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

எப்படி செல்வது?

webdunia photoWD
சாலை மார்கம் : பத்தனம்திட்டாவில் இருந்து பேருந்து மூலமாக அரண்முலா செல்லலாம். வெறும் 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அரண்முலா.

ரயில் மார்கம் : அரண்முலாவின் அருகில் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரயில் நிலையம் செங்கான்னூர்.

விமான மார்கம் : கொச்சி விமான நிலையத்தில் இருந்து 110 கி.மீ. தொலைவில் அரண்முலா உள்ளது.


புகைப்படம் மற்றும் வீடியோ - அம்பி, அரண்முலா