ரியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள நட்சத்திர வீராங்கனையான சாய்னா, பிரேசிலின் லோஹனி விசென்டியை எதிர்த்து விளையாடினார். போட்டியில் 21-17, 21-17 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் லீக் சுற்றில் ஹங்கேரியின் லாரா சரோசியை எதிர்த்து விளையாடினார். போட்டியில், 21-8, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.
குத்துச் சண்டை 64 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் மனோஜ் குமார் லித்துவனியாவை சேர்ந்த எவால்டஸ் பெட்ராஸ்கஸ் உடன் மோதினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் மனோஜ் குமார் 2-1 என்ற கணக்கில், லித்துவனியா வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.