ஒலிம்பிக் போட்டி: குத்துச்சண்டை பிரிவு காலிறுதியில் இந்தியா தோல்வி

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (17:48 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் 75 கிலோ பிரிவு காலிறுதி போட்டியில், இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வியுற்றார்.



 

 
உஸ்பெகிஸ்தானின் பெட்டமீர் மெலகீசியாவை எதிர்த்து களமிறங்கிய விகாஸ் கிருஷ்ணன், ஆரம்பம் முதலே உஸ்பெகிஸ்தான் வீரரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இறுதியில் 0-3 என்ற புள்ளி கணக்கில் தோல்வியுற்ற விகாஸ் கிருஷ்ணன் ரியோயோ ஒலிம்பிக்ஸிலிருந்து வெளியேறிய இந்திய வீரர்களின் பட்டியலில் சேர்ந்து விட்டார்.
 
ஏற்கனவே, இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஷிவா தாபா மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் தோல்வியுற்ற நிலையில், விகாஸ் கிருஷ்ணனின் தோல்வியால் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.
 
இது வரை ஒலிம்பிக் போட்டிகளில், ஆடவர் பிரிவில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வென்றது விஜேந்தர் சிங் மட்டுமே. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில், விஜேந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

வெப்துனியாவைப் படிக்கவும்