மகான் இரமண மகரிஷியின் உபதேசங்களில் சில...

மனம் அமைதி அடைய, மூச்சை சீராக்குவதே, ஒரே வழி. மௌனமாக இருப்பது விரதம், ஆயினும் வாயை மூடிக் கொண்டு, மனதைத் திரிய விட்டால், அந்த மௌனத்தால் யாதொரு பயனும் விளைவதில்லை. அலை பாயும் மனத்தால், எண்ணத்தின் சக்தி வீணாகிறது, ஒரே எண்ணத்தில் மனதை இருத்தும்போது சக்தி  சேமிக்கப்பட்டு, மனம் வலுவடைகிறது.
நான் யார் என்பது மந்திரம் இல்லை, அது நம்மில் எங்கு உதிக்கிறது என்பதைக் குறிக்கிறது, எல்லா எண்ணங்களுக்கும் மூலம் அதுவே. மனிதன் தானே அனைத்தையும் செய்வதாக எண்ணுகிறான், நாம் ஒரு கருவியே, நம்மை மீறிய சக்தியே நம்மை இயக்குகிறது எனத் தெளிந்தால், பல்  துன்பங்களிலிருந்து விடு படலாம்.
 
தன்னை உணர்ந்தவனால் மட்டுமே, உலகத்தை உணர முடியும். தான் யார் என்பதை நன்கு புரிந்த பின்னரே, இறை ஆராய்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும். ஆத்ம விசாரம், தன்னில் தேடலே, தவம்,யோகம் மந்திரம் எல்லாம். ஒருவன் தான் யார் என அறிந்து கொள்ள, ஆத்ம விசாரம் மிக முக்கியம்.
 
மனதின் கரு எல்லாம் எங்கே உதிக்கிறதோ, அதுவே ஹிருதயம்!- மையம் எனப் பொருள் படும், அது உடலின் உறுப்பல்ல, நமது எண்ணங்களின் மையம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்