விவேகானந்தரின் சிந்தனை துளிகளில் சில...!

சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
தீமையைச் செய்வதால், நமக்கு நாமே தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம். 
 
சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது! நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து  வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.
 
சுயநல எண்ணம் சிறிதும் இல்லாமல், பணம், புகழ் என்னும் எதிர்பார்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி அவனிடமிருந்து வெளிப்படும்.
 
நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பது சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநலஎண்ணம் எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்