பெண்கள் சுகப்பிரசவம் அடைய வேண்டி அம்மனுக்கு வளைகாப்பு

சனி, 11 ஆகஸ்ட் 2018 (15:53 IST)
கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4 ம் வெள்ளியை பெண்கள் சுகப்பிரசவம் அடைய வேண்டி அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்கள் கொண்டு வளையல்களால் வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் சித்தி விநாயகருக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு


கரூர் அருகே உள்ள வெங்கமேடு இனாம் கரூர், பகுதியில் உள்ள புதுக்குளத்துப்பாளையத்தில், வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமானது சுமார் 75 ஆண்டுகால பழமை வாய்ந்தவையாகும், இந்நிலையில், மூலவர் சித்தி விநாயகருக்கு சந்தன காப்பினால் விஷேச  அலங்காரங்களும், மூலவர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்கள் அடங்கிய வளைகாப்பு அலங்காரங்களும்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினையொட்டி விஷேச சந்தன காப்பினால் சித்தி விநாயகருக்கும், வளையல்களினால் அலங்காரங்கள் செய்யப்பட்டு அருள்மிகு பகவதி அம்மனுக்கு சிறப்பு  அலங்காரங்களும் செய்யப்பட்டு, அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்..

இந்த அலங்காரத்தில் கலந்து கொண்டு அருள் பெறும் பக்தர்கள் மற்றும் பெண்களுக்கு நோய் நொடிகள் நீங்கி, திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்பதும், கர்ப்பிணி பெண்களுக்கு விரைவில் சுகப்பிரசவம் நடைபெறும் என்பது ஐதீகம் என்பதினால் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் அருள் பெற்றனர். மேலும், சுவாமிகளுக்கு மஹா தீபாராதனை மற்றும், நட்சத்திர ஆரத்திகளுடன், கற்பூர ஆரத்தியும் காட்டப்பட்டது.

அம்மனுக்கு வளைகாப்பு வீடியோவை காண


சி.ஆனந்தகுமார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்