அட்சய திருதியை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் நிலையில், குரு புஷ்ய யோகம் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும். இந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி காலை 6.11 மணி முதல் மறுநாள் மதியம் 12.08 மணி வரை இந்த யோகம் நீடிக்கிறது. அடுத்து செப்டம்பர் 18-ம் தேதி காலை 6.09 மணி முதல் 9.28 மணி வரை மூன்று மணி நேரம் மட்டுமே இந்த யோகம் இருக்கும்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது போல, குரு புஷ்ய யோக நாளில் தங்கம் வாங்குவது மிக உன்னதமானது. குருவின் நிறம் மஞ்சள் என்பதால், மஞ்சள் நிறத்தில் உள்ள தங்கத்தை வாங்குவது மிகவும் அதிர்ஷ்டமானது. லட்சுமி தேவியும் பூச நட்சத்திரத்தில் பிறந்ததால், இந்த நாளில் தங்கம் வாங்குவது மேலும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் வாங்கும் தங்கம் எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேற உதவும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.